E   |   සි   |  



சமீபத்திய செய்திகள்

மார்ச் 18, 2025

பத்தாவது பாராளுமன்றத்தில் 07 துறைசார் மேற்பார்வைக் குழுக்களை அமைப்பதற்குப் பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

நான்கு துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் தலைமைப் பதவி ஆளும் கட்சிக்கு, மூன்று குழுக்கள் எதிர்க்கட்சிக்கு   பத்தாவது பாராளுமன்றத்தில் 07 துறைசார் மேற்பார்வைக் குழுக்களை அமைப்பது தொடர்பான பிரேரணை சபையில் அங்கீகரிக்கப்பட்டது. பாராளுமன்றத் தெரிவுக் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, சபைமுதல்வர், கௌரவ அமைச்சர் பிமல் ரத்னாயக்கவினால் குறித்த பிரேரணை நேற்று (மார்ச் 17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், இதற்கு சபை அங்கீகாரம் வழங்கியது. இதற்கு அமைய குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கான தலைமைத்துவங்கள் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி மத்தியில் பகிர்ந்தளிக்கப்படும் முறைக்கும் இணக்கம் காணப்பட்டது. இதற்கமைய, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு மற்றும் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு ஆகிய நான்கு குழுக்களின் தலைமைப் பொறுப்புக்களை ஆளும் கட்சிக்கு வழங்கவும் இணங்கப்பட்டது. அதேபோல, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் தலைமைப் பதவிகளை எதிர்க்கட்சிக்கு வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

மார்ச் 18, 2025

பத்தாவது பாராளுமன்றத்தில் 07 துறைசார் மேற்பார்வைக் குழுக்களை அமைப்பதற்குப் பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

நான்கு துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் தலைமைப் பதவி ஆளும் கட்சிக்கு, மூன்று குழுக்கள் எதிர்க்கட்சிக்கு   பத்தாவது பாராளுமன்றத்தில் 07 துறைசார் மேற்பார்வைக் குழுக்களை அமைப்பது தொடர்பான பிரேரணை சபையில் அங்கீகரிக்கப்பட்டது. பாராளுமன்றத் தெரிவுக் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, சபைமுதல்வர், கௌரவ அமைச்சர் பிமல் ரத்னாயக்கவினால் குறித்த பிரேரணை நேற்று (மார்ச் 17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், இதற்கு சபை அங்கீகாரம் வழங்கியது. இதற்கு அமைய குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கான தலைமைத்துவங்கள் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி மத்தியில் பகிர்ந்தளிக்கப்படும் முறைக்கும் இணக்கம் காணப்பட்டது. இதற்கமைய, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு மற்றும் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு ஆகிய நான்கு குழுக்களின் தலைமைப் பொறுப்புக்களை ஆளும் கட்சிக்கு வழங்கவும் இணங்கப்பட்டது. அதேபோல, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் தலைமைப் பதவிகளை எதிர்க்கட்சிக்கு வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

மார்ச் 18, 2025

"பாராளுமன்றக் குழுக்களின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமான சட்டரீதியான அடிப்படையைக் கண்டறிந்து அந்தப் விதப்புரைகளை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் அரசியலமைப்புக் கட்டமைப்பினுள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் வழிகாட்டும் நோக்கில்" நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழு தொடர்பில் கௌரவ சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பு

"பாராளுமன்றக் குழுக்களின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமான சட்டரீதியான அடிப்படையைக் கண்டறிந்து அந்தப் விதப்புரைகளை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் அரசியலமைப்புக் கட்டமைப்பினுள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் வழிகாட்டும் நோக்கில்" நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழு தொடர்பில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (மார்ச் 18) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.   2025 ஜனவரி 23 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, "பாராளுமன்றக் குழுக்களின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமான சட்டரீதியான அடிப்படையைக் கண்டறிந்து அந்தப் விதப்புரைகளை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் அரசியலமைப்புக் கட்டமைப்பினுள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் வழிகாட்டும் நோக்கில்" கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷண நாணயக்காரவின் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டதாகவும், 2025.03.15 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஒஷானி உமங்கா குறித்த குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதாகவும் கௌரவ சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார். அதற்கமைய, கௌரவ அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷண நாணயக்காரவின் தலைமையிலான அந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக கௌரவ பிரதி அமைச்சர் (சட்டத்தரணி) சுனில் வடகல, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவீ கருணாநாயக்க, அஜித் பி. பெரேரா மற்றும் ஒஷானி உமங்கா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக கௌரவ சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

மார்ச் 16, 2025

உண்ணாட்டரசிறை (திருத்த) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் மார்ச் 20ஆம் திகதி பி.ப 6 மணி முதல் 8 மணிவரை – பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானம்

பாராளுமன்றத்தை ஏப்ரல் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூட்டுவதற்கும் தீர்மானம் பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த இரண்டு நாள் விவாதம் ஏப்ரல் 10ஆம் திகதி ஆரம்பம்   உண்ணாட்டரசிறை (திருத்த) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை மார்ச் 20ஆம் திகதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் பின்னர் பி.ப 6 மணி முதல் 8 மணி வரை நடத்துவதற்கு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று (மார்ச் 15) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். அத்துடன், பாராளுமன்றத்தை ஏப்ரல் 8, 9 மற்றும் 10ஆம் திகதிகளில் கூட்டுவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய ஏப்ரல் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரையான நேரம் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரையான காலப்பகுதி குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டுக்கான விவாதத்திற்காக ஒதுக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. ஏப்ரல் 09ஆம் திகதி புதன்கிழமை 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணிவரையான காலப்பகுதி பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரையான காலப்பகுதி வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரையான காலப்பகுதி பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டுக்கான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் பி.ப 5.00 பி.ப 5.30 மணி வரையில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணைக்கான விவாதத்திற்கும் நேரத்தை ஒதுக்குவதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டது. ஏப்ரல் 10ஆம் திகதி வியாழக்கிழமை, நிலையியற் கட்டளை 22இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரையான நேரம் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டறை 27(2) கீழான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரையில், கடந்த 14ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட “பட்டலந்த வீட்டுத் தொகுதியில் சட்டவிரோத தடுப்பு முகாம் மற்றும் சித்திரவதை முகாம் அமைத்து அவற்றை நடத்திச் சென்றமை தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” குறித்த விவாதத்தை நடத்துவதற்கும், இதற்கான இரண்டு நாள் விவாதத்தில் பிறிதொரு நாளை மே மாதத்தில் ஒதுக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

மார்ச் 15, 2025

நீதியை நிலைநாட்டும் செயன்முறையின் மறுசீரமைப்புக்கான கூட்டு உறுதிமொழி மற்றும் ஒழுக்க நெறிகளுக்கு அமைவான அறிக்கையிடலுக்கான அழைப்பு - தேசிய மக்கள் சக்தியின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள்

அநுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம், பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்களை குறைப்பதற்கான எமது கூட்டு முயற்சிகளின் தோல்வி குறித்து மீண்டும் ஒரு கடுமையான கருத்தாடலை ஏற்படுத்தியுள்ளது. வன்முறையை எதிர்கொண்ட பெண்ணுக்கு எங்கள் ஒற்றுமையையும் அனுதாபத்தையும் வெளிப்படுத்தும் அதே வேளையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் சமூகப் பிரிவு அல்லது அடையாளம் எதுவாக இருந்தாலும், பெண்களுக்கு எதிரான அவமதிப்பு மற்றும் வன்முறை கலாச்சாரத்தை ஒழிப்பதே எமது முக்கிய பணியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் குறித்து தினமும் கேள்விப்பட்டுகிறோம். கொலை தொடக்கம் பாலியல் வன்முறை வரையில் பார்க்கும் போது,  தொழில் புரியும் இடம் முதல் சைபர் தளம்  வரையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இடம்பெறுகின்றன. பெண்கள் மீதான துஷ்பிரயோகம் பற்றி பேசுவது இன்று ஒரு பொதுவான விடயமாகி இருப்பதுடன், அது பெண்மைக்கு எதிரான கலாச்சாரத்தை தோற்றுவிக்கும் பெரிய சிக்கலை காட்டுகிறது. இணையவழி துஷ்பிரயோகம் மற்றும் வாய்மொழி துன்புறுத்தல் என்பன  பெண்களை இழிவுபடுத்தும் கலாச்சாரத்துடன் இணைந்த பகுதியாகும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். இந்த விடயத்தை பார்க்கும்போது சமூகத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் இதற்கு உணர்வுபூர்வமான பிரதிபலிப்புகள் கிடைத்திருந்தாலும், தற்போது வழமையான பெண் துஷ்பிரயோக கதை என்ற வகையில் குறை மதிப்பீடு செய்யப்படுகிறது. அதனால், வன்முறை மற்றும் துன்புறுத்தல்களுக்கு முகம்கொடுத்த பெண்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான மறுசீரமைப்புகளுக்காக தொடர்ச்சியான முன்னிலையாகும் பெண்கள் என்ற வகையில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களை மட்டுப்படுத்தும் கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்வதற்கு நாம் முயற்சிக்கும் வேளையிலும், இது தொடர்பிலான பொதுவான கருத்தாடலொன்றுக்கு ஒத்துழைக்க வேண்டியதும் எமது பொறுப்பாகும் என்று கருதுவோம். பாதிக்கப்பட்டவரின் அறிக்கையை ஊடகங்களில் வெளியிடுவதல் மற்றும் நமது சமூகத்தில் பெண்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையிலான வன்முறைக் குற்றங்கள் குறித்து உணர்வுகள் குன்றியிருப்பதையிட்டு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள், வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் தொடர்பில் உணர்வுபூர்வமாகவும் அவர்களின் கெளரவம் பாதுகாக்கப்படும் வகையில் செயலாற்ற வேண்டும். பல நேரங்களில், இந்த சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்த பின்னர் தங்கள் பெயருக்கு களங்கம் வந்துவிடும் என்ற அச்சத்தில் பெண்கள் முறைப்பாடு செய்ய தயங்குகின்றனர். அத்தகைய நிலைமைக்கு பின்னரும், தங்கள் உயிரை பாதுகாத்துக் கொண்ட  அனைவரினதும் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். குற்றச் செயல்கள் தொடர்பில் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்படுவதை ஊக்குவிக்க, நீதித்துறை, பொலிஸார் மற்றும் ஊடகங்களினால் இதுபோன்ற சம்பவங்களுக்கு முகம்கொடுத்த பெண்களின் தனியுரிமையை மற்றும் நல்வாழ்வு பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பெரும்பாலும் இவ்வாறான தனியுரிமை மீறல்கள் பெரிய அளவில் பாதிப்பை எதிர்கொள்வதற்கும் பாதிக்கப்பட்டவர் அவதூறுக்கு உள்ளாவதற்கும் வழிவகுப்பதோடு, இந்த சம்பவத்திலும் நாம் அதனை பார்க்க முடிகிறது. வன்முறைக்கு பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணின் செயல்கள் அல்லது அவளைப் பற்றிய நம்பிக்கையை தொடர்பில் சமூக ஊடகங்களில் விவாதிப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர் தொடர்பில் பல்வேறு முடிவுகள் எட்டப்படுவதை காண முடிகிறது. இதனால், பாலியல் சீண்டல்கள் தொடர்பில் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்வதை பெண்கள் தவிர்க்கின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட  பெண்ணின் தனியுரிமையைப் பாதுகாக்குமாறும், துன்புறுத்தல் சம்வபம் தொடர்பில் உண்மைக்கு புறம்பான கதைகளை கூறுவதையும் பரப்புவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறான நிகழ்வுகளை எதிர்கொண்ட ஒவ்வொருவரும் அந்த அதிர்ச்சிகளுக்கு ஒரே மாதிரியாக பதிலளிக்கவில்லை என்பதையும், பெண்களுக்கு எதிரான மறைமுகமான வன்முறை அச்சுறுத்தலுக்கு எதிராக போராடுவது அவசியமானது என்பதையும் வலியுறுத்துகிறோம். அதற்கு, இத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பெண்களின் உண்மை அனுபவங்களை மையமாகக் கொண்டதாக நமது நீதிச் செயற்பாடுகள் அமைய வேண்டும். எனவே, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குப் போராடும் நமது நிறுவனக் கட்டமைப்புகளின் திறனை மேம்படுத்த, நமது குற்றவியல் நீதி கட்டமைப்பை போலவே ஊடகங்களிலும் தேவையான சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள். பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளைக் கையாள பொலிஸார், நீதிபதிகள் மற்றும் ஊடகங்களுக்கு தெளிவான மற்றும் குறிப்பிட்ட தரநிலைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இறுதியாக, பெண்களுக்கு எதிரான வன்முறையை மட்டுப்படுத்துவதற்கான நமது சட்ட கட்டமைப்பு, ஊடகங்கள் மற்றும் பொலிஸ் துறைகளில் சிறப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். ஒரு சமூகமாக, உயிர் பிழைத்த பெண்களின் தனியுரிமையைப் பாதுகாப்பது, அவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல், அதைப் குறித்து முறைப்பாடு செய்ய முன்வரும் பெண்களை தையரியம் இழக்கச் செய்யாமல், அவர்களுக்கு நியாயம் கிடைக்க ஆதரவளிப்பது நமது பொறுப்பாகும்.   கௌரவ. ஹரினி அமரசூரிய - பிரதமர் மற்றும் கல்வி உயர் கல்வி, தொழில் கல்வி அமைச்சர் கௌரவ. ஹேமாலி வீரசேகர – செயற்குழு பிரதித் தலைவர் கௌரவ. சரோஜா சாவித்ரி போல்ராஜ் - மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ. சட்டத்தரணி சாகரிகா ஆதாவுத- பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ. கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன - பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. ஒஷானி உமங்கா - பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. கிருஷ்னண் கலைச்செல்வி - பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. சட்டத்தரணி  நிலந்தி கொட்டஹச்சி - பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. சத்துரி கங்கானி - பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. நிலூஷா லக்மாலி கமகே - பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. சட்டத்தரணி  சமன்மலி குணசிங்க - பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க - பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. அனுஷ்கா திலகரத்ன - பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே - பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. ஹசாரா லியனகே - பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. தீப்தி வாசலகே - பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. ஹிருனி விஜேசிங்க - பாராளுமன்ற உறுப்பினர்       கௌரவ. அம்பிகா சாமிவேல் - பாராளுமன்ற உறுப்பினர்       கௌரவ. சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர - பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. சட்டத்தரணி கீதா ஹேரத் - பாராளுமன்ற உறுப்பினர்






சபை அலுவல்கள்




அனைத்தும்  

அடுத்துள்ள சபை அலுவல்கள் (கடந்த)

மார்.

21

பாராளுமன்ற நாட்காட்டி

அமர்வு நாட்கள்

முழு நாட்காட்டி

செய்திமடல்களுக்கு பதிவு செய்யவும்







பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks