பார்க்க

E   |   සි   |  

2025 நவம்பர் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சனாதிபதியின் செய்திகள்

1 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்)


சபாநாயகரின் அறிவித்தல்கள்

2 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    வரவுசெலவுத்திட்ட, பொருளாதார மற்றும் நிதி நிலை அறிக்கை 2026
(ii)    பிரதான பொது முதலீட்டுக் கருத்திட்டங்கள் 2026 - 2028
(iii)    மக்கள் வரவுசெலவுத்திட்டம் 2026
(iv)    நடுத்தர கால கடன் முகாமைத்துவ மூலோபாயம் 2026-2030 மற்றும் வருடாந்த கடன் திட்டம் 2026
(v)    அமைச்சுவாரியான பிரதான செலவினக் கூறுகள் - வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகள் வரைபு 2026
(vi)    வரிச் செலவினங்கள் பற்றிய கூற்று – 2024/2025 
(vii)    அரசதுறை பதவியணி பற்றிய தகவல்கள் - 2025
(viii)    மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கை  - 2025
(ix)    2026 ஆம் நிதியாண்டிற்கான இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டு வரைபு


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2026) - இரண்டாம் மதிப்பீடு

கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் இன்று பி.ப. 1.30 மணியளவில் (2025ஆம் ஆண்டிற்கான) வரவு செலவுத்திட்ட உரையை ஆற்றினார்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

2026 ஆம் ஆண்டு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கான குழு நிலையின் போது பிரேரிக்கப்படவுள்ள திருத்தங்கள் அனைத்தும், நவம்பர் 12 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு அல்லது அதற்கு முன்னர் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்படுதல் வேண்டும்.


இதனையடுத்து, 1752 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2026) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2025 நவம்பர் 8ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks