பார்க்க

E   |   සි   |  

2025 நவம்பர் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XVIII, XX, XXI, XXII மற்றும் XXIII ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XV, XVI மற்றும் XVII ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் X, XI மற்றும் XII ஆம் பகுதிகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான பிரதேச அபிவிருத்தி வங்கியின் வருடாந்த அறிக்கைகள்
(ii)    2024 ஆம் ஆண்டுக்கான தேசிய சேமிப்பு வங்கியின் ஒருங்கிணைந்த ஆண்டறிக்கை.
(iii)    2023 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(iv)    2024 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(v)    மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 52) 25 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 32 ஆம் பிரிவின் கீழ் மதுவரி உரிமக் கட்டணங்கள் தொடர்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் 2025 ஒக்தோபர் 04 ஆம் திகதி பரிந்துரைக்கப்பட்ட விதிகள்
(vi)    2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் பிரிவு 26 உடன் சேர்த்து வாசிக்கப்படும் பிரிவு 22 இன் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2025 ஏப்பிறல் 01 ஆம் திகதிய 2430/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி
(vii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 22 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மேல், இலங்கை கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ பாளி வளாக வளாகத்தின் பீடங்கள் மற்றும் துறைகளைக் குறித்துரைப்பது தொடர்பில் அப்போதைய கல்வி, விஞ்ஞானம், மற்றும் தொழினுட்பவியல் அமைச்சரால் ஆக்கப்பட்டு,  2024 நவெம்பர் 29 ஆம் திகதிய 2412/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(viii)    2025 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் பிரகாரம் 2025.09.01 முதல் 2025.09.30 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்திச் செயற்பாடுகள் என்பதிலிருந்து ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(ix)    அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை தொடர்பான விடயங்கள் பற்றிய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(x)    2024 ஆம் ஆண்டுக்கான கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xi)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தென் மாகாண சபை தொடர்பான விடயங்கள் பற்றிய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்
(xii)    2023 ஆம் ஆண்டுக்கான நீர் வளச் சபையின் வருடாந்த அறிக்கை
(xiii)    2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான புத்தசாசன நிதியத்தின் வருடாந்த அறிக்கைகள்
(xiv)    2024 ஆம் ஆண்டுக்கான கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xv)    2024 ஆம் ஆண்டுக்கான தேசிய சுவடிகூடத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க                    
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான்                    
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ஒஷானி உமங்கா                    
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ஹெட்டிஆரச்சி
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ ரவி கருணாநாயக்க

இந்திய - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான சிக்கல்கள்


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ சிவஞானம் சிறீதரன்  

அரசியலமைப்பு பேரவையில் தனது நடத்தை குறித்து கௌரவ சாமர சம்பத் தசனாயக அவர்களின் கருத்துக்கள்


சிறப்புரிமைகள்

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அரவிந்த செனரத் அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2025 செப்தெம்பர் 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2026) - இரண்டாம்  மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட முதலாம் நாள்) 
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“மாவனெல்ல பிரதேச சபை முன்மொழிவை செயற்படுத்துதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ கபீர் ஹஷீம் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


இதனையடுத்து, 1835 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2026) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2025 நவம்பர் 10ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks