பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : தவிசாளர் குழாமில் சேவையாற்றவுள்ள உறுப்பினர்கள்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXIV மற்றும் XXVI ஆம் பகுதிகள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஒத்தியல்பு மதிப்பீட்டிற்கான தராதர அங்கீகார சபையின் வருடாந்த அறிக்கை
(ii) 2024 ஆம் ஆண்டுக்கான அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கைகளும் ஆண்டுக் கணக்குகளும்
(iii) 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் வருடாந்த அறிக்கைகள்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பலிஹேன
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லால் பிரேமநாத்
(iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) தீப்தி வாசலகே
(v) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்ம குமார சுபசிங்ஹ
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ ரவி கருணாநாயக்க
2022 ஆம் ஆண்டில் கடன் தேக்கம் மற்றும் இறையாண்மை இயல்புநிலையின் சட்ட மற்றும் நிதி தாக்கம்
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) நிலைபேறான கடன் முகாமைத்துவத்திற்கான அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட உத்திகள் தொடர்பாக 2025.10.07 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் போது கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் பதிலளித்தார்.
(ii) எளிமைப்படுத்தப்பட்ட சேர்பெறுமதி வரியை ஒழித்தல் மற்றும் அது ஏற்றுமதி சமூகத்தில் ஏற்படுத்தும் பாதகமான தாக்கம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக 2025.09.24 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் போது கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2026) - இரண்டாம் மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட மூன்றாம் நாள்)
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதை நிறுத்துதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சாமர சம்பத் தசனாயக அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
இதனையடுத்து, 1830 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2026) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2025 நவம்பர் 12ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks