பார்க்க

E   |   සි   |  

2025 நவம்பர் 12ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

1 : சிறப்புரிமை பிரச்சினையை எழுப்ப அனுமதி கோரி கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா சமர்ப்பித்த கடிதம் தொடர்பானது


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─
•    2022 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LXVII ஆம் பகுதியையும்; 
•    2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் L மற்றும் LI ஆம் பகுதிகளையும்; மற்றும்  
•    2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXV ஆம் பகுதியையும், மூன்றாவது தொகுதியின் XVIII ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XIII மற்றும் XIV ஆம் பகுதிகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாச

‘பிரிவெனா’ கல்வியில் சீர்திருத்தம்

மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் மற்றும் கௌரவ புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் அவர்கள் பதிலளித்தனர்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2026) - இரண்டாம்  மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட நான்காம் நாள்) 
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)


இதனையடுத்து,  மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2026) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2025 நவம்பர் 13ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks