பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
1 : சிறப்புரிமை பிரச்சினையை எழுப்ப அனுமதி கோரி கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா 2025 நவம்பர் 10ஆம் திகதி சமர்ப்பித்த கடிதம் தொடர்பானது
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2023 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் கோர்ப்பரேஷன் லிமிடெட்டின் ஆண்டறிக்கை
(ii) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டங்கள் மூலம் திருத்தி அமைக்கப்பட்ட 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆவது பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 20 ஆவது பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 ஒற்றோபர் 15 ஆம் திகதிய 2458/43 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(iii) 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஆண்டறிக்கை
(iv) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றிய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்
(v) 2023 ஆம் ஆண்டுக்கான விமான மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(vi) 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, குடியியல் வான்செலவுச் சட்டத்தின் 6,8 மற்றும் 31 ஆம் பிரிவுளுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 117(2) ஆம் பிரிவின் (ண) மற்றும் (த்) என்னும் பந்திகளின் கீழ் அப்போதைய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2025 பெப்புருவரி 06 ஆம் திகதிய 2422/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(vii) 2002 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபைச் சட்டத்தின் 7 ஆம் பிரிவின் (ஓ) மற்றும் (த) என்னும் பந்திகளுடனும் பிரிவு 9 உடனும் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 39 ஆம் பிரிவின் கீழ் அப்போதைய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2025 பெப்புருவரி 06 ஆம் திகதிய 2422/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(viii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கைப் பொலிஸ் தொடர்பான விடயங்கள் பற்றிய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பீ. ஆரியவங்ஷ
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) ஜகத் குணவர்தன
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அருண பனாகொட
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ கே. காதர் மஸ்தான்
அரிசி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு
மேற்சொன்ன வினாவிற்கு கௌரவ வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் பதிலளித்தனர்.
சிறப்புரிமைக் கேள்விகள்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அமிர்தநாதன் அடைக்கலநாதன்
சமூக ஊடகங்களில் தனக்கு எதிரான போலி தகவல்களைப் பரப்புதல்
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாட கௌரவ சபாநாயகரை சந்திப்பது குறித்து கௌரவ கே.வி. சமந்த வித்யாரத்னவின் கருத்து
(iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நிஷாந்த சமரவீர
நிர்மாணத் தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் திரு. சுசந்த லியனாராச்சியின் அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவிற்கு எதிரான அவதூறான கருத்துக்கள்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2026) - இரண்டாம் மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட ஐந்தாம் நாள்)
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“கண் சுகாதார தேசிய மூலோபாயத் திட்டம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
இதனையடுத்து, 1830 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2026) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2025 நவம்பர் 14ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks