பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
571/ '18
கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன,— அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வ/ப மிஹின் லங்கா விமானக் கம்பனியினால் நடாத்தப்பட்டுவந்த விமானப் பயண நிகழ்ச்சித்திட்டங்களை, 2016.10.30 ஆம் திகதி தொடக்கம் ஸ்ரீ லங்கன் விமானக் கம்பனி பொறுப்பேற்றுக் கொண்டது என்பதை அறிவாரா;
(ii) அதற்கு சமாந்தரமாக ஸ்ரீ லங்கன் விமானக் கம்பனிக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட மிஹின் லங்கா ஊழியர்களின் எண்ணிக்கை யாது, இவர்களின் பெயர் மற்றும் பதவிகள் யாவை;
(iii) இவ்வாறு சேர்த்துக்கொள்ளப்படாது சேவை முடிவுறுத்தப்பட்ட மிஹின் லங்கா ஊழியர்களின் எண்ணிக்கை யாது, இவர்களின் பெயர் மற்றும் பதவிகள் யாவை;
(iv) சேவை முடிவுறுத்தப்பட்ட ஒவ்வொரு ஊழியருக்கும் செலுத்தப்பட்ட நட்ட ஈட்டுத் தொகை வெவ்வேறாக யாது;
(v) 2016.12.31ஆம் திகதியின் பின்னர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்களின் பெயர் மற்றும் பதவிகள் யாவை;
(vi) 2016.12.31 ஆம் திகதி வரை ஆலோசகர் பதவிகளை வகித்துக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை யாது;
(vii) மேலே (vi) இல் குறிப்பிடப்பட்டவர்களில் எதிர்வரும் மாதங்களுக்காக சம்பளம் வழங்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை யாது, இவர்களுக்குச் செலுத்தப்பட்ட நட்டஈட்டுத்தொகை, சம்பளம் அல்லது கொடுப்பனவு எவ்வளவு;
(viii) போதியளவு நட்டஈடு கிடைக்காமையால் மேன்முறையீடு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை யாது;
(ix) இவர்களுக்கு நிலுவை நட்டஈட்டுத் தொகை வழங்கப்படுமா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-06-21
கேட்டவர்
கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks