பார்க்க

E   |   සි   |  

பாராளுமன்றத்தின் பெறுமதிமிக்க கட்டடவடிவமைப்பு மற்றும் பாராளுமன்ற முறைமையின் முக்கியத்துவத்துடன் கூடிய அழகிய முகப்புக்கூடத்தின் ஊடாக சபா மண்டபத்திற்குள் உங்களை இனிமையான பயணத்திற்கு அழைத்துச்செல்லும் அபூர்வ புகைப்படங்களின் தொகுப்பைக் கண்டுகளிக்க உள்நுழையுங்கள்.

கட்டடக் கலைஞர்களின் சிறப்பு மற்றும் அரசியல் ரீதியான அடைவுகளை நினைவுபடுத்தும் வகையில் இந்த அதியுயர் நிறுவனம் குறித்துக் கற்பதற்கும் இதனூடாக உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும். அரசாங்கத்தின் நிர்வாகத்திற்குத் தேவையான முக்கியமான கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன குழு அறைகள் முதல், உத்வேகம் நிறைந்த பாராளுமன்ற அமர்வுகளின் காட்சிகள் இந்நாட்டின் ஜனநாயகத்தின் சாத்தியக்கூறுகளை உலகுக்கு எடுத்துரைக்கின்றன.

பாராளுமன்றத்தின் அற்புதமான கூரை அமைப்பு, கம்பீரமான படிக்கட்டுக்கள், சிற்பச் செதுக்கங்கள் நிறைந்த வெள்ளி மற்றும் செப்புக் கதவுகள் உள்ளிட் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட மாபெரும் கலைப்படைப்புக்களைக் கண்டுகளிப்பீர்கள். ஒவ்வொரு புகைப்படமும் அழகிய கலைப் படைப்புக்களை வரையறுக்கும் முக்கிய ஆதராங்களாக விளங்குகின்றன.

நவீனத்துவும் மற்றும் பாரிம்பரியம் ஆகியவற்றின் சிறந்த கலவையான ஜெஃப்ரி பாவாவின் தனித்துவமான கட்டடக்கலையின் அதிசயத்தை ஆராய்வதற்கு இந்தப் புகைப்படங்கள் உங்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். நீங்கள் அரசியல், வரலாறு அல்லது கட்டடக்கலை வடிவமைப்புப் போன்ற எந்தத்துறையில் ஆர்வம் காட்டுபவராக இருந்தாலும் “பாராளுமன்றம் பற்றிய புகைப்படத்தொகுப்பு” உங்களுக்குப் பெறுமதியான கண்கவர் காட்சிகளின் தொகுப்பாக அமையும். இந்த நாட்டின் நீண்டகால ஜனநாயக விழுமியங்களைப் பற்றிய ஒரு சிறந்த கதையை அமைதியாகச் சொல்லக் கூடிய இத்தொகுப்பின் மூலம் அழகிய பயணத்தில் இணையுங்கள்.

காண்க






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks