E   |   සි   |  

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் யாப்பின் 70 (1) ஆம் பிரிவின் படி பாராளுமன்றக் கூட்டத்தொடரினை இடைநிறுத்தும் அதிகாரத்தினை சனாதிபதி அவர்கள் கொண்டுள்ளார். அத்துடன் அரசியல் அமைப்பு 33 (அ) இன் பிரகாரம் பாராளுமன்றதின் அமர்வு ஒவ்வொன்றினதும் ஆரம்பத்திலும் பாராளுமன்றதின் அரசாங்கக் கொள்கைக் கூற்றை வாசிப்பதற்கும்; பாராளுமன்றத்தின் சடங்குமுறையான இருக்கைகளில் தலைமைதாங்குவதற்கும் அரசியலமைப்பு 33 (ஆ) பிரிவு சனாதிக்கு அதிகாரம் வழங்குகின்றது.

ஆளுநர் சேர். கென்றி மொங் மாசொன் மூர் அவர்களின் தலைமையில் முதலாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரானது வைபவரீதியாக 1947 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 14 ஆம் திகதி அன்று ஆரம்பிக்கப்பட்டது. இங்கு ஆளுநர் அவர்களின் சிம்மாசன உரை இடம்பெற்று இது பின்னர் விவாத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வாக்களிப்பு விடப்படும்.

இரண்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வினை இரண்டாவது எலிசபெத் மகாராணி அவர்களினால் 1954 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 12 ஆம் திகதி வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்து. இங்கு மகாராணியினது சிம்மாசன உரை இடம்பெற்றதுடன் இவ்வுரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

அதனைத்தொடர்ந்து முதலாவது அமர்வு வைபவரீதியாகவோ அல்லது வைபவரீதியற்றோ ஆரம்பிக்கப்பட்டு வந்துள்ளது.

1978 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 7 ஆம் திகதி புதிய அரசியல் யாப்பு பிரகடனப்படுத்தப்பட்டதன் மூலம் சானாதிபதியின் சிம்மாசன உரைக்குப் பதிலாக அரசினது கொள்கைப் பிரகடன அறிக்கை இடம்பெறுகின்றது. தற்போதைய நடைமுறையின் படி இவை விவாதத்திற்கோ வாக்களிப்பிற்கோ எடுத்துக் கொள்ளப்படுவதில்லை .






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks