E   |   සි   |  

இலங்கை பாராளுமன்றத்தில் குழு அமைப்பு

சட்டவாக்கச் சபையொன்றின் முன் குவிந்து கிடக்கும் பாரிய அளவிலான வேலைகளும் அவற்றை நிறைவேற்றுகைக்கான மட்டுப்படுத்தப்பட்ட காலமும் அச் சட்டவாக்கச் சபையின் ஒவ்வொரு விடயத்தையும் சபாபீடத்தின் முன்னிலையில் விரிவாக ஆராய்வதை இயலாததாக்குகின்றது. அவ்வேலையானது துரிதமாகவும் போதிய கவனத்துடனும் செய்யப்பட வேண்டுமாயின், அதன் பொறுப்புகளிற் சில, முழுச் சபையினதும் நம்பிக்கைக்குப் பாத்திரமான வேறு சில முகவர் அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டாக வேண்டும். இந்நோக்கத்திற்கென இதுவரை உருவாக்கப்பட்ட முறைகளுள் மிகவும் நடைமுறைக்கேற்றதாக விளங்குவதுதான், சிறிய எண்ணிக்கையிலான சட்டவாக்கச் சபையின் உறுப்பினர்களைக் கொண்டு ஆக்கப்பட்ட குழு முறைமை ஆகும் . அனைத்து முக்கிய விடயங்களினதும் குறிப்பாகச் சட்டவாக்கக் கருத்திட்டங்களினதும் விரிவான பூர்வாங்கமான ஆய்வுகளுக்காகக் குழுக்களை உருவாக்குதல் என்பது, அனைத்துப் பாராளுமன்றங்களிலும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பேராயத்திலும் சட்டப்படி நிறுவப்பட்ட ஒரு பழக்கமாக இருந்து வந்துள்ளது.

இலங்கையில் குழு முறைமையானது அதன் தாய்ப் பாராளுமன்றமான பொதுச் சபையை அடிப்படையாகக் கொண்டது. பாராளுமன்றத்தின் பாரிய வேலைப்பளுவைக் குறைத்து அதன் சார்பாக அதன் அலுவல்கள் பலவற்றை ஆற்றுமுகமாக இலங்கைப் பாராளுமன்றமும் அதன் ஆரம்ப காலந்தொட்டுப் பல குழுக்களை அமர்த்தி வந்துள்ளது.

குழுக்களை நியமிப்பதற்கான அதிகாரம் அரசியல் யாப்பின் 74 ஆம் உறுப்புரையின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கமைய, பாராளுமன்றமானது அதன் அலுவல், அதன் அமர்வுகளின் போதான ஒழுங்கின் பேணுகை மற்றும் எவ்விடயங்களுக்கு ஏற்பாடுகள் தேவைப்படுகிறதோ அல்லது அவ்வாறு செய்யப்படுவதற்கு அரசியல் யாப்பின் அங்கீகாரம் தேவைப்படுகிறதோ அவ்விடயங்கள் என்பனவற்றை ஒழுங்குபடுத்துமுகமாக நிலையியற் கட்டளைகளை இயற்றுவதற்கு இவ்வுறுப்புரையானது அதிகாரம் அளிக்கிறது. இவ்வுறுப்புரையின் கீழ் இலங்கைப் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளை இயற்றும் போது, வேறிடங்களில் பெறப்பட்ட அனுபவங்களை அனுகூலமாகக் கொண்டு, பல்வேறு பாராளுமன்றக் குழுக்களை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நிலையியற் கட்டளைகளில் செய்யப்படுகின்றன.

குழு பட்டியல்

காண்க

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | விசேட குழுக்கள்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 5 வது கூட்டத்தொடர்  | சிறப்பு நோக்கங்களுக்கான குழுக்கள்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்  | 5 வது கூட்டத்தொடர்  | அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்

பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks