பார்க்க

E   |   සි   |  

நிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம் இன் கீழுள்ள பிரிவுகள்

நிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம் இன் கீழுள்ள பிரிவுகள்

 

நிதி மற்றும் வழங்கல் திணைக்களம் பாராளுமன்றத்தினது சுமுகமான தொழிற்பாட்டில் மிகவும் முக்கியமான ஒரு பங்களிப்பை செய்கின்றது. நிதிப் பணிப்பாளர் இந்தத் திணைக்களத்தின் தலைவரும் மற்றும் பிரிவுத் தலைவரும் ஆவார். இவர் நிதி விடயங்கள் பற்றி பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகத்திற்கு நேரடியாக அறிக்கை செய்வதற்கும் ஆலோசனையை வழங்குவதற்கும் கடமைப்பட்டுள்ளார். நிதி மற்றும் வழங்கள் திணைக்களம் ‘நிதி மற்றும் கணக்குகள்’, ‘வழங்கல்கள் மற்றும் சேவைகள்’ மற்றும் ‘உணவுபான கணக்குகள்’ என்ற மூன்று பணிப்பிரிவுகளின் கீழ் இயங்குகின்றது. இந்த மூன்று பிரிவுகளும் மூன்று உதவிப் பணிப்பாளர்களினால் மேற்பார்வை செய்யப்படுகின்றன. 

திணைக்கள தலைவர் என்ற வகையில் பொதுவான பொறுப்புக்களை நிறைவேற்றுதல், பொது நிதி முகாமைச் சட்டத்திற்கும், ஏனைய சட்டவாக்கங்களுக்கும், பொதுக் கொள்கைகளுக்கும், நடைமுறைகளுக்கும், அரசாங்கத்தின் நிதிப் பிரமாணக்குறிப்புகளுக்கும், அரசாங்கம் அவ்வப்பொழுது வெளியிடுகின்ற சுற்றறிக்கைகளின் ஏற்பாடுகளுக்கும் அறிவுரைகளுக்கும் இணங்க நிதி சார் விடயங்கள் முகாமை செய்யப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்துகொள்வதற்கு கட்டுப்பாடுடைய தொழிற்பாட்டுப்  பணிகளை நிறைவேற்றுதல் முதலியன நிதிப் பணிப்பாளரின் செயல்நோக்கில் வருகின்ற பிரதான தொழிற்பாடுகளாகும்.    

இதில் பின்வரும் பணிகள் உள்ளடங்கும்–

  1. வரவுசெலவுத்திட்டத்தைத் தயாரித்தல் மற்றும் வரவுசெலவுத்திட்டத்தின் ஏற்பாடுகளை நிறைவேற்றுதல், நிதி நிலவரத்தை மீளாய்வுசெய்தல், நிதி அறிக்கைகளைத் தயாரித்தல், திறைசேரி அறிமுகம் செய்யும் கணக்கீடு சார்ந்த முறைமைகளை நடைமுறைப்படுத்துதல், சம்பள முறைமையை முகாமை செய்தல் மற்றும் சிறந்தவொரு உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையை பேணுதல். 
  2. நிதி மற்றும் வழங்கல் திணைக்களத்தின் சகல தொழிற்பாடுகளையும் நிறைவேற்றுவதற்கு மனித வளங்களின் வினைத்திறன் வாய்ந்த பயன்பாட்டை உறுதிசெய்யும் பொருட்டு மூன்று பிரிவுகளினதும் பதவியணிக்கு தலைமைத்துவத்தையும் வழிகாட்டலையும் வழங்குதல்.

 

 




திணைக்களத் தலைவர்

பெயர்

G. Sarath Kumara

மின்னஞ்சல்

gamage_sk@parliament.lk







பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks