பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4(அ). | மக்களது சட்டமாக்கற்றத்துவம், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்தினாலும் மக்கள் தீர்ப்பொன்றின் போது மக்களாலும் பிரயோகிக்கப்படுதல் வேண்டும். |
75. | கடந்த காலத்தையும் உள்ளடக்கும் பயன் கொண்ட சட்டங்களை (அரசியலமைப்பின் ஏதேனும் ஏற்பாட்டை நீக்கும் அல்லது திருத்தும் அல்லது அரசியலமைப்புக்கு ஏதேனும் புதிய ஏற்பாட்டைச் சேர்க்கும் சட்டங்கள் உட்பட சட்டங்களை) ஆக்குவதற்குப் பாராளுமன்றம் தத்துவம் கொண்டிருத்தல் வேண்டும். |
76. | அரசியலமைப்பின் 76(2)(3) மற்றும் (4)ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமையப் பாராளுமன்றம் அதன் சட்டமாக்கற்றத்துவத்தைத் துறத்தலோ, எவ்விதத்திலும் பராதீனப்படுத்துதலோ ஆகாது என்பதுடன், ஏதேனும் சட்டமாக்கற்றத்துவம் கொண்ட ஏதேனும் அதிகாரத்தை நிறுவுதலுமாகாது. |
152. | நிலையியற் கட்டளை 133 - திரட்டு நிதியத்தை அல்லது குடியரசின் வேறு நிதியங்களைக் கையாளுவதற்கு அல்லது அந்த நிதியங்கள் மீது பொறுப்புக்களைச் சுமத்துவதற்கு அல்லது ஏதேனும் வரியை விதிப்பதற்கு அல்லது அப்போதைக்கு வலுவிலுள்ள ஏதேனும் வரியை நீக்குவதற்கு, கூட்டுவதற்கு அல்லது குறைப்பதற்கு அதிகாரமளிக்கும் சட்டமூலம் அல்லது பிரேரணை எதுவும் அமைச்ச ரொருவரால் மட்டும் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். |
23. | எல்லாச் சட்டங்களும் துணைநிலைச் சட்டவாக்கங்களும் சிங்களத்திலும் தமிழிலும் சட்டமாக்கப்படுதலும் அல்லது இயற்றப்படுதலும் வெளியிடப்படு தலும் வேண்டும் ; அவை ஆங்கில மொழிபெயர்ப்பையும் கொண்டிருத்தல் வேண்டும். |
118. | இலங்கைக் குடியரசின் உயர்நீதிமன்றமானது, குடியரசிலுள்ள மிக மேலானதும் முடிவானதுமான மேனிலைப் பதிவேட்டு நீதிமன்றமாக விருத்தல் வேண்டும் என்பதுடன், அது அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக் கமைய, பின்வரும் விடயத்தில் நியாயாதிக்கம் பிரயோகித்தலும் வேண்டும்; அதாவது - (அ) அரசியலமைப்புக் கருமங்கள் தொடர்பிலான நியாயாதிக்கம். |
120. | அரசியலமைப்பின் உறுப்புரைகள் 82,83 மற்றும் 84 இன் கீழான ஏதேனும் சட்டமூலம் அல்லது அதன்கண் உள்ள ஏதேனும் ஏற்பாடு அரசியலமைப்புக்கு ஒவ்வாததாக உள்ளதா எனும் கேள்வி எதனையும் தீர்மானிப்பதற்குத் தனியானதும் பிரத்தியேகமானதுமான நியாயாதிக்கம் உயர் நீதிமன்றத்துக்கு இருத்தல் வேண்டும். |
121. | உறுப்புரை 120 இன் கீழ் ஒரு சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கும்போது, உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும் வரைக்கும் அச்சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படலாகாது. |
123. | சட்டமூலமானது, அரசியலமைப்பின் 82, 83 மற்றும் 84 ஆம் உறுப்புரைகளின் ஏற்பாடுகளுடன் இயைந்து போகின்றதா என்றும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு ஒவ்வாததாகவுள்ளதா என்பது பற்றியும் உயர்நீதிமன்றம் அதனது தீர்மானத்தில் கூறுதல் வேண்டும். |
124. | அரசியலமைப்பின் 120 மற்றும் 121 ஆம் உறுப்புரைகளுக்கமைய, இவ்வாறான சட்டமூலத்தின் அரசியல் அமைப்புக்கு அமைந்து போகும் தன்மை குறித்து விசாரிப்பதற்கு வேறு எந்த நீதிமன்றத்திற்கோ அல்லது வேறு ஏதும் நிறுவனத்திற்கோ அதிகாரம் கிடையாது. |
125. | உயர்நீதிமன்றமானது, அரசியலமைப்பின் பொருள் கோடல் பற்றிய ஏதேனும் பிரச்சினையை விசாரணை செய்வதற்கும் அது பற்றித் தீர்மானிப்பதற்கும் தனியானதும் பிரத்தியேகமானதுமான நியாயாதிக்கம் கொண்டிருத்தல் வேண்டும். |
77. | 82 ஆம் உறுப்புரையின் (1)ஆம், (2) ஆம் பந்திகளின் தேவைப்பாடுகள் எவையேனும் மீறப்பட்டுள்ளதா என்றும் விசேட பெரும்பான்மையினால் நிறைவேற்றப்பட வேண்டுமா என்றும் ஒவ்வொரு சட்டமூலத்தையும் சட்ட மாஅதிபர் ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். குழு நிலையின் இறுதியில் சட்டமூலமொன்றில் திருத்தம் செய்யுமாறு முன்மொழியப்படும் சந்தர்ப்பத்தில் சட்ட மாஅதிபர் தம் கருத்தைச் சபாநாயகருக்குத் தெரிவித்தல் வேண்டும். |
நிலையியற் கட்டளை 43(3) - ஒரு சட்டமூலத்துக்கு முன்மொழியப்படும் ஒவ்வொரு திருத்தமும் அரசியலமைப்பின் 77 ஆம் உறுப்புரைக்கமைய சட்ட மாஅதிபரால் ஆராயப்படல் வேண்டும்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks