பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 8(1) இல் கூறப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக, பாராளுமன்றம் வேறுவிதமாகத் தீர்மானித்தாலன்றி, ஒரு மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக் கிழமையை அடுத்துவரும் வாரத்திலும் ஒன்றுவிட்ட அடுத்த வாரத்திலுமாக இரு வாரங்களிலும் பாராளுமன்றம் அமர்தல் வேண்டும். அத்தகைய முதலாவது மூன்றாவது வாரங்களில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் பாராளுமன்றம் அமர்தல் வேண்டும்.
ஆயினும், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 75 இன் ஏற்பாடுகளுக்கு அமைவாக, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை பரிசீலிக்க பாராளுமன்றம் இருபத்தாறு நாட்கள் கூட வேண்டும். எனினும், பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அங்கீகாரத்திற்கு அமைய இவ்வொதுக்கப்பட்ட நாட்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம்.
பாராளுமன்றத்தில் 2023 ஆகஸ்ட் 22 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக, 2023 ஆகஸ்ட் 22 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் பாராளுமன்ற அமர்வு நேரங்கள் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மு.ப. 9.30 முதல் பி.ப. 12.30 வரையும் பி.ப. 1.00 முதல் 5.30 வரையுமாகும்
மேற்சொன்ன வண்ணம் பாராளுமன்றம் பின்வருமாறு கூடுகின்றது:-
(செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில்)
மு.ப. 9.30 முதல் மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
மு.ப. 10.30 முதல் பி.ப. 12.30 | சபையின் பிரதான அலுவல்கள் |
பி.ப. 1.00 முதல் பி.ப. 5.00 | |
பி.ப. 5.00 முதல் பி.ப. 5.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (2 வினாக்கள்)/ ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை |
(மதியபோசண இடைவேளை பி.ப. 12.30 முதல் பி.ப. 01.00)
ஒவ்வொரு மாதத்தினதும் முதல் அமர்வு வாரத்தில் புதன்கிழமை நாட்களில், பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்களுக்கு வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு மணித்தியாலத்தில் அரை மணித்தியாலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்சொன்ன வண்ணம், வினா மணித்தியாலம் பின்வருமாறு அமைகிறது:-
புதன்கிழமைகளில்
மு.ப. 9.30 முதல் மு.ப. 10.00 | பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (4 வினாக்கள்) |
மு.ப. 10.00 முதல் மு.ப. 10.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் (8 வினாக்கள்) |
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks