E   |   සි   |  

நிருவாகத் திணைக்களம் இன் கீழுள்ள பிரிவுகள்

நிர்வாகத் திணைக்களத்தின் வகிபங்கு

1953 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்கப் பாராளுமன்ற பணியாட்டொகுதிச் சட்டம் பாராளுமன்றத்தின் நிர்வாகத்திற்கான அரசாங்கத்தின் மிக உன்னத தனித்துவமான நிறுவனமாக விளங்குவதற்கான சட்ட ஏற்பாடுகளை வழங்கியது. இந்தச் சட்டத்தினது உரிய ஏற்பாடுகளின் பிரகாரம் பணியாட்டொகுதியினரின் நிர்வாகம் சம்பந்தமான கொள்கை சார்ந்த தீர்மானங்களை எடுப்பதற்கும், அதே நேரம் அவசியமான ஒழுங்குவிதிகளை மேற்கொள்ளுவதற்கும் சபாநாயகரின் தலைமையில் நிதி அமைச்சர், சபை முதல்வர், எதிர்கட்சித் தலைவர் ஆகியோரை உள்ளிட்ட பணியாட்டொகுதி ஆலோசனைக் குழு என்றழைக்கப்படும் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் பணியாட்டொகுதி அரசியல் அமைப்பின் 65 ஆம் உறுப்புரையின் பிரகாரம் நியமிக்கப்படுகின்ற பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் கீழ் இயங்குகின்றது. செயலாளர் நாயகம் ஆலோசனைக் குழுவின் செயலாளராகவும் தொழிற்படுகின்றார்.

பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பணியாளர்கள் போட்டித்தன்மை வாய்ந்த சூழலில் தமது செயற்பாடுகளை வினைத்திறன் வாய்ந்ததாக மேற்கொள்ளுவதை இயலச்செய்யும் நிமித்தம் அவர்களின் தனிப்பட்ட மேம்பாடு, நல்வாழ்வு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தும் வகையில் திறமுறை ரீதியாகப் பங்களிப்புச் செய்வது நிர்வாகத் திணைக்களத்தின் பிரதான வகிபங்காகும்.

துரிதமாக மாறிவரும் ஒரு சூழலில், இந்த அதி உயர் நிறுவனத்தின் இலக்குகளை அடையவும் மற்றும் சவால்களை வெற்றிகொள்ளவும் சகல துறைகளிலும் கணிய மற்றும் தர ரீதியாக திறம்படச் செயலாற்றும் நோக்கத்திற்காகவும், மூலோபாயத் தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கான சரியான மனோபாவமும் அறிவும் கொண்ட இயக்க வல்லமையுடைய ஆட்களின் தேவை அவசியம் எனம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த இலக்குகளை அடையும் நிமித்தம், பொறுப்புக்களை உணர்ந்து பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தினது பணியாட்டொகுதியினரது முன்னேற்றம், விருத்தி மற்றும் நலனோம்பல் என்பவற்றுக்காக நிர்வாகத் திணைக்களத்தின் பணியாளர்கள் பற்றுதியுடன் தம்மை அர்ப்பணித்து செயலாற்றி வருகின்றனர். இந்த நோக்கத்திற்கான மாற்றத்தை ஏற்படுத்த கடும் முய்றசி மேற்கொள்ளப்பட்டு வரும் அதே வேளையில் மனித வள முகாமைத்துவத்தில் சரியான கொள்கைகள், தீர்மானங்கள் அதே நேரம் செயற்பாடுகளால் நிறுவனத்தை அதன் போக்கில் இட்டுச் செல்வதற்கான மனித வளக் கொள்கைகளை நிர்ணயித்துக் கட்டமைப்பதற்கான அதிகாரம் நிர்வாகத் திணைக்களத்திற்கு உரித்தளிக்கப்பட்டுள்ளது.

எமது ஆளணியினரே எமது பெரும் சொத்தாகும். எனவே, நாம் ஒரே மனித வள சமுதாயத்தின் ஆதரவுக்காக வளங்களைப் பகிர்வதன் மூலம் எமது விழுமியங்களும் வெளிப்படைத்தன்மையும் ஒரேமாதிரியான மனித வள அணுகுமுறையினூடான / தொடர்பாடலூடான கருத்துப் பரிமாற்றலை அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டும் என நாம் அடையாளம் கண்டுள்ளோம்.

 

பணிப்பாளரின் (நிர்வாகம்) நோக்கெல்லையின் கீழ் வரும் முக்கிய தொழிற்பாடுகள் பின்வருமாறு:

அ.         பாராளுமன்றச் செயலகத்தில் மனித வள அபிவிருத்தித் தேவைகள் சம்பந்தமான மூலோபாயத் தீர்மானங்களின் அமுலாக்கல்

ஆ.        செயலகத்தின் மனித வளக் கொள்கைகள் மற்றும் தொடர் செயற்றிட்டங்கள் அபிவிருத்தி, தொடர்பாடல் மற்றும் அமுலாக்கல்

இ.        திறன் அடிப்படையிலான தொழில் விளக்கவுரை, ஆட்சேர்ப்பு, பணியமர்த்தல், செயலாற்றுகை முகாமைத்துவம் மற்றும் பயிற்சி அறிமுகம்

ஈ.        ஆட்சேர்ப்பு, பணியமர்த்தல், தொழில் ஊக்குவிப்பு, தொழில் மற்றும் திறன்கள் அபிவிருத்தி, செயலாற்றுகை மதிப்பீடு, இழப்பீடு மற்றும் ஆராய்ச்சி நிர்வாகம் மற்றும் தொழில் முன்னேற்றம் சம்பந்தமான கொள்கைகளின் மீளாய்வு மேம்படுத்தல் மற்றும் அமுலாக்கல்

உ.       தொழில் மற்றும் திறன் அபிவிருத்தித் திட்டங்களின் மீளாய்வும் அமுலாக்கலும்

ஊ.      வினைத்திறன்மிக்க பணியாளர் ஈடுபாட்டு இலத்திரனியியல் மனித வளத் தரவுத் தளத்தின் அபிவிருத்தி

எ.        பணியாட்களின் ஒழுங்குமுறை நடவடிக்கைகளின் மீளாய்வு மற்றும் முன்னேற்றம்

ஏ.        1953 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்கப் பாராளுமன்றப் பணியாட்டொகுதிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக பொருத்தமான நிர்வாகக் கையோடொன்றைத் தயாரித்தல்

ஐ.       ஆளணி அபிவிருத்திற்கான உயர் மட்டப் பயிற்சி மற்றும் மனித வள அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல்

ஒ.       மனித மூலதனத்தின் இயலுமையை மேம்படுத்துவதற்கான மூலோபாயத் தீர்மானங்களின் அமுலாக்கம் மற்றும் மனித வளக் கொள்கைகள் நடவடிக்கை முறைகளைக் கண்காணித்தலினூடான பணியாள் முகாமைத்துவத்தில் செயற்பாட்டு முனைப்பான பங்கேற்பு

ஓ.       நவீன செயலாற்றுகை முகாமைத்துவ முறைமையை அமுல்படுத்தல் தொடர்பான பயனுறுதி வாய்ந்த பங்கேற்பு

ஒள.    பாராளுமன்றச் செயலகத்தின் வாகனத் தொகுதியின் இயங்குமுறை, பராமரிப்பு முதலியன

க்.       உறுப்பினர் சேவைகள் அலுவலகத்தின் நோக்கெல்லையின் கீழ் வரும் விடயங்கள்

 



திணைக்களத் தலைவர்

பெயர்

Rajapakse RPR

மின்னஞ்சல்

rasika_r@parliament.lk







பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks