பார்க்க

E   |   සි   |  

அறிமுகம்

பாராளுமன்றத்தை ஒத்திவைத்தல்

பாராளுமன்றம் அடுத்துறு அமர்வு தினம் வரை ஒத்திவைக்கப்படும்.

எனினும், 48 மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட காலத்திற்கு ஒத்திவைக்கப்படுகையில், பிரதம அமைச்சர் சபாநாயகரை வேண்டிக்கொள்வதன் மீது பாராளுமன்றத்தை ஒத்திவைக்க இயலும்.

நாளொன்றுக்கான பிரதான அலுவல்கள் முடிவுற்றதும் பாராளுமன்றம் அடுத்துறு தினத்திற்கு ஒத்திவைக்க முன்னர் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயமொன்றை விவாதிப்பதற்கு அரை மணித்தியால நேரம் ஒதுக்கப்படுகிறது.

ஒத்திவைப்புப் பிரேரணைகளின் வகைகள்

  1. அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் மீதான விவாதம் (பாராளுமன்ற நிலையியற் கட்டளை 19 ஐப் பார்க்க.)
  2. சபையின் பிரதான அலுவல்கள் முடிவுற்ற பின்னர் “சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை” களுக்காக அரை மணித்தியாலத்தை ஒதுக்குதல். (பாராளுமன்ற நிலையியற் கட்டளை 20 ஐப் பார்க்க.)
  3. பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் தீர்மானத்திற்கமைய சமர்ப்பிக்க முடியுமான பிரேரணைகள்.

ஒத்திவைப்புப் பிரேரணைகள்

(பாராளுமன்ற நிலையியற் கட்டளை 19)

இத்தகைய ஒத்திவைப்புப் பிரேரணையொன்றைச் சமர்ப்பிக்கையில் அமர்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் சபாநாயகரின் இணக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காக எழுத்துமூலமான அறிவித்தலொன்றை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் பாராளுமன்றத்தின் அனுமதியும் பெற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.

பாராளுமன்றத்தின் அனுமதி கிடைக்கப் பெறாத சந்தர்ப்பத்தில், 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையினர் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து அத்தகைய வேண்டுகோளுக்கு ஒத்திசைவு வழங்குவதன் மீது அத்தகைய பிரேரணையைச் சமர்ப்பிக்க முடியும்.

அவ்வாறு அனுமதி பெற்ற பிரேரணையொன்றை பி.ப. 5.00 மணிக்கு சமர்ப்பிக்க முடியும். ஏதேனும் தினமொன்றில் அத்தகைய பிரேரணை ஒன்றுக்கு மாத்திரம் சமர்ப்பிக்க இடமளிக்கப்படும்.

மேலும், சபாநாயகர் இணக்கந் தொிவிக்க நிராகரிக்கும் சந்தர்ப்பத்தில், அப்பிரேரணையில் அனுமதி வழங்கப்பட்ட பிரிவை சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வாசிப்பதற்கு இடமளிக்கப்படும். நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை சபாநாயகர் சபையில் எடுத்தியம்புதல் வேண்டும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks