07

E   |   සි   |  

தொடர்பாடல் திணைக்களம் இன் கீழுள்ள பிரிவுகள்

தொடர்பாடல் திணைக்களம் இன் கீழுள்ள பிரிவுகள்

அண்மைய வருடங்களில் இலங்கைப் பாராளுமன்றத்தின் பணி எளிதில் அணுகப்படக்கூடியதாகவும் வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும் மாறியுள்ளது. பாடசாலை சிறுவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் பாராளுமன்றத்தை ஒவ்வொரு வருடமும் பார்வையிடுகின்றனர். பாராளுமன்றத்தின் புதிய நிலையியற் கட்டளைகளின் நிறைவேற்றத்துடன் குழு முறைமையானது குறுகிய காலத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ள பல புதிய குழுக்களுடன் விரிவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் பாராளுமன்றத்தின் பணிபற்றிய அதிகளவு கவனத்தை ஈர்க்கக் கூடிய பொதுமக்களின் கருத்துக்களையும் பங்குபற்றுதலையும் வரவேற்கும்.

தகமையுள்ள தொழில்வான்மையாளர்களைக் கொண்டமைந்த புதிதாக ஸ்தாபிக்கப்படட தொடர்பாடல் திணைக்களம், பாராளுமன்றம் பற்றிய உயர் தரத்திலான தகவல்களை இலங்கை மக்களுக்கு பயனுறுதிமிக்கதாக தொிவிக்கப்படுவதை உறுதிசெய்வதால் பொதுமக்களுடனான வெளித்தொடர்பு எண்ணக்கரு உறுதிப்படுத்தப்படுகின்றது.

நோக்கம்:

இலங்கை பாராளுமன்றத்திற்கும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரஜைகள்¸ ஊடகங்கள்¸ சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் சமூக குழுக்களுக்கும் இடையிலான இடைத்தொடர்பின் தரத்தை மேம்படுத்தல்.

குறிக்கோள் :

• பாராளுமன்றத்தின் பணிகளில் பொதுமக்களின் பங்கேற்பையும் விழிப்புணர்வையும் அதிகரித்தல்.

• பாராளுமன்றத்தின் முக்கிய விடயங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் தொடர்பில் பிரஜைகளுக்கு தகவல்கள் மற்றும் அறிவூட்டல்களை வழங்கி அவர்களை வலுப்படுத்தல்.

• பாராளுமன்றத்தின் பொது வெளிக்கள மற்றும் தொடர்பாடல் முயற்சிகளின் நிலைப்புத்தன்மையை உறுதிப்படுத்தல் மற்றும் நிறுவனமயப்படுத்தல்.

அண்மைய வருடங்களில் இலங்கை பாராளுமன்றத்தின் பணிகள் மேலும் அணுகக்கூடியவையாகவும் வெளிப்படைத் தன்மை வாய்ந்தவையாகவும் அமைந்துள்ளன. பாடசாலை மாணவர்கள்¸ உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொரு வருடமும் பாராளுமன்ற கட்டடத்துக்கு வருகை தருகின்றனர். பாராளுமன்ற குழுக்கள் தற்பொழுது பொது மக்களின் பங்களிப்பை வரவேற்றிருப்பதன் மூலம் பாராளுமன்றத்தின் பணிகள் கூடுதல் கவனம்பெற்றுள்ளன.

பாராளுமன்றத்தில் உள்ள பல்வேறு சேவைப் பிரிவுகள் மற்றும் ஏராளமான பணியாளர்கள் நேரடியான தொடர்பாடல் சேவைகள் மற்றும் ஒன்லைன் மற்றும் ஊடக தொடர்புகளை பொதுமக்களுடன் பேணி வருகின்றனர். வளர்ந்துவரும் பொது மக்களுடனான ஈடுபாட்டை ஒருங்கிணைக்க பாராளுமன்றத்துக்கு தனியான தொடர்பாடல் பணிப்பகமொன்றுக்கான தேவை உருவாகியிருப்பது இதன்மூலம் தெளிவாகிறது.

பாராளுமன்றத்தின் சிறந்த தொடர்பாடல் பணியானது பல்வேறு மூலங்களிலிருந்து பிரதிபண்ணப்படுவதுடன், ஏனைய இடங்களில் காணப்படும் இடைவெளிகளையும் அடையாளம் கண்டுள்ளது. தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் உரிமையுடன் பாராளுமன்றத்திலிருந்து தெளிவான தகவல் வெளியாவதை தொடர்பாடல் திணைக்களம் உறுதிப்படுத்துகிறது.

பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை நாடு முழுவதிலுமுள்ள இலங்கையர்களுக்கு தெரியப்படுத்தும் ஊடகங்களுக்கு சரியான நேரத்தில், துல்லியமான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான தேவை உள்ளது. பாராளுமன்றம் தொடர்பில் பொதுமக்களின் நிலைப்பாடு என்ன என்பது எமக்கு வரலாற்று நீதியாகத் தெரியும். அதன் உறுப்பினர்கள் மற்றும் அதன் பணிகள் என்பன பெரிதும் மாறுபட்டன. பொதுவாக உறுப்பினர்களின் பங்களிப்பு, பாராளுமன்றத்தில் அவர்களின் பங்களிப்பு, அவர்களின் பொறுப்புக்கள் மற்றும் பாராளுமன்றத்தின் வகிபாகம் என்பன தொடர்பில் மக்கள் மத்தியில் கலப்பான புரிதல் இருக்கலாம். இலங்கை மக்களுக்குப் பகிரங்கமாகத் தெரியப்படுத்தி பாராளுமன்றத்தின் உயர்ந்த தரத்தினை உறுதிசெய்வது தொழில்முறையாக செயற்படும் தொடர்பாடல் திணைக்களத்துக்கு முக்கியமானதாகும்.

தொடர்பாடல் பணிப்பாளர், இலங்கை பாராளுமன்றம்

வினைத்திறனான பாராளுமன்றத்தின் முன்னேற்றத்திற்கு பங்குதாரர்களின் பங்களிப்பை பெற அவசியமான தகவல்களுக்கான அணுகல் மற்றும் சட்டவாக்கம், பிரதிநிதித்துவம், தொடர்பாடல் மற்றும் மேற்பார்வை போன்ற அவர்களின் செயற்பாடுகளை முன்னெடுக்க தொடர்பாடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுடன் தரமான ஈடுபாடு போன்றவற்றுக்கு தொடர்பாடல் பணிப்பாளர் வழிகாட்டுவார். ஊடகம், விருந்தினர் சேவை, பொது உறவுகள், வர்த்தகநாம சந்தைப்படுத்தல், விளம்பரப்படுத்தல், டிஜிட்டல்/சமூக ஊடகம் மற்றும் உருவாக்கப்பட்ட சாதனங்கள் உள்ளிட்ட தொடர்பாடல் கட்டுப்பாடுகளின் முழுமையான நிலைமைகள் பற்றி தொடர்பாடல் மூலோபாயமொன்றை செம்மைப்படுத்தி அவற்றை வழங்குவார்.

தொடல்பாடல் பணிப்பாளர் வினைத்திறனான செயற்பாடு மற்றும் சகல விருந்தினர்களையும் உறுதிப்படுத்தும் நிலையத்தின் பணியாளர்கள் மற்றும் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதுடன்¸ ஊடகம் மற்றும் பாராளுமன்றத்தின் ஏனைய பங்குதாரர்களுக்கு உயர்ந்த தரத்திலான சேவை வழங்கப்படுவதையும், சிறந்த அனுபவத்தை அவர்கள் பெற்றுக் கொள்வதையும் உறுதிப்படுத்துவார். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் பொது விவகாரங்கள், பாராளுமன்ற செயற்பாடுகளைத் திட்டமிடும்போது அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குவது, புத்தாக்கமான யோசனைகளை பரிந்துரைத்தல் மற்றும் பாராளுமன்றத்தின் இலக்கை அடைவதற்கு அரசியல், பாராளுமன்ற கருவிகள் மற்றும் அவற்றின் கட்டமைப்புக்களை பயனுள்ள வழிகளில் நாம் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்தும் ஆலோசனை வழங்குவார்.

ஊடக முகாமையாளர்

திணைக்களத்தின் தொடர்பாடலை முகாமைத்துவம் செய்வது, பாராளுமன்றம் பற்றி நிலையான மற்றும் தெளிவான நிலைப்பாடு வெளிச்செல்வதை உறுதிப்படுத்துவது, தொடர்பாடல் மூலோபாயத்தை தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல், ஊடகங்கள் மற்றும் அவற்றின் வருகையை முன்நடவடிக்கையாக முகாமைத்துவம் செய்தல், தொடர்பாடல் திட்டங்களை தயாரித்தல் மற்றும் அவை தொடர்பான ஈடுபாட்டுக்கான வாய்ப்புக்களை அடையாளம் காணுதல். பாராளுமன்றத்தின் துண்டுப்பிரசுரங்கள் போன்ற பாரியளவிலான பிரசுரங்கள், கோபி டேபிள் புத்தகம், வருடாந்த அறிக்கை போன்றவற்றை செம்மையாக்கல் மற்றும் நடைமுறைப்படுத்தல், திட்டங்களுக்கு உதவிசெய்தல் என்பவற்றை ஊடக முகாமையாளர் முன்னெடுப்பார்.

ஊடக முகாமையாளர் வருடாந்த அறிக்கை¸ புதிய வலைப்பதிவுகள் ஆகியவற்றின் ஆசிரியராக செயற்படுவதுடன்¸ பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கட்டுரைகளை கையாள்வதுடன்¸ செம்மைப்படுத்துவார். பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள். வீடியோக்கள் இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்படுவதற்கு தலைமைத்துவம் வழங்குவார். ஊடக அமைப்புக்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருடன் ஈடுபாடுகளை பேணும் உயர்மட்ட அதிகாரியாக முகாமையாளர் பிரதிநிதித்துவம் செய்வதுடன்¸ நவீன¸ மக்க்ள மையப்படுத்தப்பட்ட¸ இலங்கை பாராளுமன்றத்துக்கு மக்களை அழைக்கும் வகையில் நிபுணத்துவம் மிக்க தொலைக்காட்சி விளம்பரங்களை தயாரிப்பார்.

ஊடக அதிகாரி(கள்)

ஊடக அறிக்கைகளை தயாரித்தல் மற்றும் வெளியிடுதல்¸ பொது மக்களின் கருத்துக்கள் தொடர்பில் பாராளுமன்ற/குழுக்களுக்கான அணியினருடன் இணைந்து செயற்படுதல்¸ பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வெளியீடுகள் மற்றும் ஆய்வுகளைச் சுருக்குதல் ஆகியவற்றில் ஊடக அதிகாரிகள் மேற்கொள்வார்கள். ஊடக நிலையம்/கலையகத்திலுள்ள உபகரணங்களைப் பயன்படுத்தும் ஊடகவியலாளர்களுக்கு ஊடக அதிகாரி(கள்)உதவுவதுடன்¸ ஊடக நிலையத்தில் நடத்தப்படும் நிகழ்வுகள் மற்றும் ஊடக சந்திப்புக்களுக்கு உதவுவர்.

இணையத்தளத்தை புதுப்பித்தல்உள்ளிட்ட தொடர்பாடல் தளங்களை நாளாந்தம் முகாமைத்துவம் செய்தல்¸ இணையத்தளம் மற்றும் சுமூக ஊடக கணக்குகளுக்கு (டுவிட்டர்¸ பேஸ்புக்¸ யூடியூப்) உள்ளடக்கங்களை வழங்குவோருடன் ஒருங்கிணைப்புக்களை மேற்கொள்ளுதல். https://www.facebook.com/methuki.senali

புகைப்படங்கள் எடுத்தல்¸ வீடியோ ஒளிப்பதிவுசெய்தல் மற்றும் தேவையான ஒலிகளைப் பதிவுசெய்தல், நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய முகாமைத்துவம் செய்ய உதவுதல், போக்குவரத்துக்கு உதவுதல், அங்குரார்ப்பணங்கள் குறித்த சந்தைப்படுத்தல் மற்றும் ஊடக சந்திப்புக்களை ஏற்பாடு செய்தல்¸ மாணவர்கள்/விருந்தினர்களுடன் ஈடுபாட்டை ஏற்படுத்தும் சாதனங்களைத் தயாரித்தல்.

பொது வெளிக்கள குழு

பல்வேறு வழிகளில் செல்வாக்குச் செலுத்தும் பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு ஒத்துழைக்க பல்வேறு திறன்களைக் கொண்ட¸ நன்கு அனுபவம் மிக்க பல்வேறு பின்புலங்களைக் கொண்ட நூற்றுக்கணக்கானவர்கள் திரைமறைவில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

பரந்துபட்டுள்ள தொடர்பாடல் திணைக்கள குழுவின் ஒரு பகுதியே பொது வெளிக்கள குழுவாகும். இது பாராளுமன்றத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்வது¸ பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படும் பணிகளில் பொது மக்களை ஈடுபடுத்தல்¸ ஈடுபாடுகளை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களை அடையாளம் காணுதல் என்பவற்றில் ஈடுபடும். நாங்கள் அரசியல் ரீதியாக பக்கச்சார்பற்றவர்களாக இருப்பதுடன்¸ எமது பணிகளுக்கு வழிகாட்டும் நோக்கம் மற்றும் வலுக்கள் தொடர்பில் பெருமையடைகிறோம்.

சமகால ஜனநாயகம், இன்றைய இலங்கை பாராளுமன்றம் மற்றும் இலங்கை பாராளுமன்றம் பற்றிய நூற்றூண்டு வரலாறுகள் தொடர்பில் அவர்கள் சுற்றுலாக்களை முன்னெடுப்பர். இந்த சுற்றுலாக்கள் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்ட கற்றல் சுற்றுலாக்கள்¸ பொது மக்களை இலக்காகக் கொண்ட சுற்றுலாக்கள் மற்றும் விசேட சுற்றுலாக்களை உள்ளடக்கியுள்ளன. ஒவ்வொரு வருடமும் பாராளுமன்றத்துக்கு வருகைதரும் ஆயிரக்கணக்கான விருந்தினர்கள்¸ பாராளுமன்ற விவாதங்களைப் பார்வையிட வருபவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிகழ்வுகளில் கலந்துகொள்ள வரும் விருந்தினர்களுக்கான நுழைவுகளை நாம் வழங்கி வருகின்றோம்.

பொது வெளிக்கள முகாமையாளர்

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பாராளுமன்றத்துக்கு வருகைதரும் விருந்தினர்கள் வரவேற்கப்படுவது மற்றும் விருந்தினர் மையம் என்பவற்றை பொது வெளிக்கள முகாமையாளர் மேற்பார்வை செய்வதுடன்¸ விருந்தினர்களை ஈர்க்கக்கூடிய சுற்றுலாக்கள் மற்றும் பொது மக்களுடனான ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில் பொது வெளிக்கள அதிகாரிகளுக்குப் பயிற்சிகளை வழங்குவார். இலங்கை மற்றும் வெளிநாட்டவர்கள் உள்ளடங்கலான சகல பார்வையாளர்களுக்கும் அர்த்தபுஷ்டியான மற்றும் சிறந்த அனுபவத்தை வழங்கக் கூடிய சுற்றுலாக்களை வழங்குதல்.

கலந்துரையாடல் மற்றும் சுற்றுலாக்களுக்கான உள்ளடக்கங்கள் மூலம் வருங்கால தலைமுறை வாக்காளர்கள் தகவலறிந்த¸ பொது ஈடுபாடு கொண்ட குடிமக்களாக தங்கள் பங்கை ஆற்ற ஊக்குவித்தல். விருந்தினர் மையத்தில் விருந்தினர்களுக்கான ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில் பாராளுமன்றத்தின் மாதிரி மற்றும் நூதனசாலை போன்ற அர்த்தபுஷ்டியான திட்டங்களை முகாமையாளர் உருவாக்குவார். புதிய பாராளுமன்ற நூதனசாலையை முகாமைத்துவம் செய்வதில் முன்னிலை வகிப்பார். நடமாடும் பாராளுமன்றத்தின் வெளிக்கள திட்டங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதை மேற்பார்வை செய்வதுடன்¸ பாடசாலை பாராளுமன்றத் திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சுடன் இணைப்புக்களை ஏற்படுத்தி¸ கல்வித் துறையில் உள்ளவர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாராளுமன்றத்துடன் ஈடுபாடுகளை ஏற்படுத்தல்.

பொது வெளிக்கள அதிகாரி(கள்)

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் விருந்தினர்கள் மற்றும் விருந்தினர் மையத்துக்கு வருபவர்களை வரவேற்றல் மற்றும் சகல வெளிக்கள செயற்பாடுகளிலும் பங்குபற்றுவது பொது வெளிக்கள அதிகாரிகளின் பிரதான கடமையாகும். இலங்கை மற்றும் வெளிநாட்டவர்கள் உள்ளடங்கலான சகல பார்வையாளர்களுக்கும் அர்த்தபுஷ்டியான மற்றும் சிறந்த அனுபவத்தை வழங்கக் கூடிய சுற்றுலாக்களை வழங்குவர்.









பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks