பார்க்க

E   |   සි   |  

வாக்காளராவதற்கு தகைமைபெற்ற எந்த ஒரு நபரும், அவர் அரசியலமைப்பின் 91 ஆம் அத்தியாயத்தில் விதித்துரைக்கப்பட்ட விசேட ஏற்பாடுகளின் கீழ் தகைமையற்றவராகினாலொழிய, பாராளுமன்ற உறுப்பினரொருவராகத் தெரிவு செய்யப்படுவதற்கும் தகைமையுடையவராவார்.

ஒரு வேட்பாளரை தகமையற்றவராக்கும், அரசியலமைப்பின் 91 ஆம் அத்தியாயத்தில் விதித்துரைக்கப்பட்ட விசேட ஏற்பாடுகள்.

  1. அத்தகைய ஆள் குடியரசின் சனாதிபதியாகவிருந்தால் அல்லது நீதித்துறை அதிகாரியொருவராக இருந்தால் அல்லது அரசியலமைப்பினால் விதித்துரைக்கப்பட்ட வாறான ஓர் அரசாங்க அதிகாரியாக அல்லது ஒரு கூட்டுத்தாபன அதிகாரியாக இருந்தால்(அரசாங்க அதிகாரிகள் அல்லது அரசாங்கக் கூட்டுத்தாபன அதிகாரிகள் தொடர்பான தகைமையிழத்தலானது, அத்தகைய அதிகாரி வகிக்கும் பதவிக்கான 1970-11-18 ஆந் திகதியன்றுள்ளவாறான ஆரம்பச் சம்பளத்தின் அடிப்படையில் அல்லது அத்தகைய பதவி 1970-11-18 ஆம் திகதிக்குப் பின்னர் தோற்றுவிக்கப்பட்ட தினத்தில் இருந்தவாறான சம்பளத்தின் அடிப்படையில் விதித்துரைக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் ஆரம்பச் சம்பளம் ஆண்டொன்றிற்கு ரூபா.7200/= வை விட அதிகமாயின் அப்பதவிக்கு இத்தகைமையீனம் பொருந்துவதாகும்.)
  2. அத்தகைய ஆள் பொலிஸ், இராணுவ கடற்படை அல்லது வான்படை உறுப்பினர் ஒருவராயின்
  3. உரிய சட்டத்தின் நியதிகளுக்கமைய அவர் விடுவிக்கப்படாத நொடித்தவராக அல்லது கடன் தீர்க்க வக்கற்றவராகப் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பின்.
  4. அரசாங்கத்தின் அல்லது பாராளுமன்றத்தினால் விதித்துரைக்கப்படக்கூடிய அரசாங்கக் கூட்டுத்தாபனத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்த வேலை ஒன்றில் அத்தகைய ஆள் ஆர்வங்கொண்டிருப்பின் (இந்தத் தகைமையீனத்துக்குரிய ஒப்பந்த வேலைகளைப் பாராளுமன்றம் விதித்துரைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும். எனினும் முன்னைய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டிருந்த சம்பந்தப்பட்ட தகைமையீனம் இங்கும் பொருந்துவதாகும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.)
  5. ஓர் ஆள், ஒன்றுக்கு மேற்பட்ட தேர்தல் மாவட்டங்களில் வேட்பாளராகப் பெயர் நியமனஞ்செய்யப்பட்டவராக அல்லது ஒரே மாவட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகளின் அல்லது குழுக்களின் வேட்பாளராகப் பெயர் நியமனஞ்செய்யப்பட்டவராக இருப்பின்.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks