07

E   |   සි   |  


நீங்கள் பாராளுமன்ற கல்வி மையத்திற்கு அழைக்கப்படுகிறீர்கள்

இலங்கைப் பாராளுமன்றம் உங்களுக்காக எப்போதும் திறந்திருக்கும் ஒரு நிறுவன கட்டமைப்பாகும். பாராளுமன்ற முறைமைகள் அதன் பாரம்பரியம் மற்றும் பிரசைகளின் பொறுப்புக்கள் தொடர்பில் உங்களுடன் நாம் பலமுறை கலந்துரையாடியுள்ளோம்.

"பாராளுமன்ற அறிவகம்" நிகழ்ச்சித்திட்டத்தினூடாக பின்வரும் தலைப்புக்களில் உங்களை நாம் தெளிவுப்படுத்த முயற்சிக்கின்றோம்.

  1. சனநாயகம் மற்றும் பாராளுமன்றம்
    1. சனநாயகத்தின் பரிணாம வளர்ச்சி
    2. மக்கள் இறையாண்மை
    3. இலங்கைப் பாராளுமன்றத்தின் வகிபங்கு
    4. பாராளுமன்ற நடைமுறைகள்
  1. பாராளுமன்றத்தின் சட்டவாக்க செயற்பாடுகள்
  2. குழுக்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள்
  3. சனநாயகம் மற்றும் ஊடக அறிக்கையிடல்
  4. பாராளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம்
  5. சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள்
  6. பாராளுமன்ற உறுப்பினரின் வகிபங்கு
  7. பாராளுமன்றம் மற்றும் பிரசைகளின் பங்களிப்பு

இலங்கைப் பாராளுமன்றத்தில் பல வருடங்களாக பணியாற்றிய அனுபவம் வாய்ந்த வளவாளர்களின் உதவியுடன், மேற்கூறிய தலைப்புகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சில தலைப்புகளில் உங்களது கிராமம், நிறுவனம், பாடசாலை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெளிவுப்படுத்தல்களை மேற்கொள்வதற்கு "பாராளுமன்றத்தின் அறிவகம்" நிகழ்ச்சித்திட்டம் தயாராக உள்ளது.

இதுபோன்ற நிகழ்ச்சித்திட்டங்களை உங்களது நிறுவனம்/ அமைப்பு/ குழு ஆகியவற்றுக்கு மேற்கொள்ள ஆர்வமாக இருந்தால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகவல் படிவத்தை பூர்த்திசெய்து எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலமோ அல்லது எமது அலுவலக அதிகாரிகளை தொடர்புகொள்வதன் மூலமோ மேற்கொள்ள முடியும். நீங்கள் எங்களுக்கு அனுப்பும் தகவலின் அடிப்படையில் எமது அதிகாரிகள் நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்படும் திகதி மற்றும் நேரத்தை உங்களுக்கு வழங்குவார்கள்.

தொடர்புகளுக்கு, தொடர்பாடல் திணைக்களம், இலங்கை பாராளுமன்றம்.

தொலைபேசி

011-2777318 (பொது சேவைகள் பிரிவு)

0715352672 / 0779899085

மின்னஞ்சல்

outreach@parliament.lk


நிகழ்வுகள்

காண்க






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks