பார்க்க

E   |   සි   |  

படிகள் அனைத்து அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள்
அமர்வுப் படி ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்திற்கும் சமுகமளிப்பதற்காக ரூ. 2,500/=.
குழுப் படி அமர்வு இல்லாத தினங்களில் குழு நடைபெறும்போது ஒவ்வொரு குழுக் கூட்டத்திற்கும் சமுகமளிப்பதற்காக ரூ. 2,500/=. (அமர்வு தினங்களில் நடைபெறும் குழுக்கூட்டத்திற்கு சமுகமளிப்பதற்கு படியெதுவும் செலுத்தப்படுவதில்லை.)
அலுவலகப் படி அலுவலகமொன்றைப் பராமரிப்பதற்கு ரூ. 100,000/= வழங்கப்படுகின்றது.

படிகள் கௌரவ அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் கௌரவ உறுப்பினர்கள்
உறுப்பினர்களின் படி பாராளுமன்றத்தால் செலுத்தப்படுவதில்லை ரூ. 54,285.00
கேளிக்கைப் படி ரூ. 1,000/=
ஓட்டுநர்களின் படி ரூ. 3,500.00 (அரசாங்கத்தால் அவருக்கு ஓட்டுநரொருவர் வழங்கப்படாவிடின் மாத்திரமே கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓட்டுநர்களின் படி செலுத்தப்படுகின்றது)
எரிபொருள் படி பாராளுமன்றத்திலிருந்து ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்ட தேர்தல் மாவட்டத்திற்கான தூரம் மற்றும் ஒவ்வொரு மாதத்தினதும் முதலாவது தினத்தில் 1 லீற்றர் டீசலின் அங்கீகரிக்கப்பட்ட சந்தை விலை ஆகியவற்றின் அடிப்படையில் எரிபொருள் படிகள் செலுத்தப்படுகின்றன.(உ+ம்: கொழும்பு 283.94 லீற்றர்கள், கம்பஹா மற்றும் களுத்துறை 355.58 லீற்றர்கள்)
தொலைபேசிப் படி நிலையான இணைப்பு மற்றும் கையடக்கத் தொலைபேசிக்காக மாதாந்தம் ரூ. 50,000.00 வழங்கப்படும். (தொலைபேசி விலைப்பட்டியல்களுக்கான கொடுப்பனவுகளோ அல்லது மீளளிப்புகளோ இல்லை)
தனிப்பட்ட பணியாட்டொகுதியினருக்கான போக்குவரத்துப் படி அலுவலகத்தின் 04 தனிப்பட்ட பணியாட்டொகுதி உறுப்பினர்களின் போக்குவரத்து செலவுகளுக்காக மாதாந்தம் ரூ. 10,000/= செலுத்தப்படுகின்றது (ஒவ்வொருவருக்கும் ரூ. 2,500/= வீதம்)
இலவச தபாற்கட்டண வசதிகள் ரூ. 350,000/= பெறுமதியான முத்திரைகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் வருடாந்தம் வழங்கப்படுகின்றன. (காலாண்டிற்கு ரூ. 87,500/=)

கண்காணிப்பு உறுப்பினரின் படி, வாழ்வாதாரப் படி, வீட்டுப் படி, புகையிரத அனுமதிச்சீட்டுகள் அல்லது பத்திரிகைப் படி போன்ற வேறேதேனும் கொடுப்பனவுகள் இல்லை.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks