07

E   |   සි   |  

இணைப்புப் பொறியியலாளர் திணைக்களம் இன் கீழுள்ள பிரிவுகள்

இணைப்புப் பொறியியலாளர் திணைக்களம் இன் கீழுள்ள பிரிவுகள்

வரலாறு

பாராளுமன்ற கட்டிடத் தொகுதி, சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம், சிராவஸ்தி, ஜயவர்தனகம வீடமைப்புத் தொகுதியிலுள்ள பணியாளர் விடுதிகள், நுவரெலியாவிலுள்ள சேனாதிபதி இல்லம் ஆகியவற்றின் சிவில் பராமரிப்புப் பணிகளுக்காக 1990ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

ஒட்டுமொத்தக் குறிக்கோள்

மின் உயர்த்திகள், வளிச்சீராக்கிகள், CCTV, MATV, ஒலி ஒருங்கிணைப்பு, குளிரூட்டல் அறைகள் போன்ற சேவைகள் மற்றும் உபகரணங்களின் சுமுகமாக செயற்பாட்டினை உறுதிப்படுத்துதலும் துணைச்சேவைத் திணைக்களங்களின்(CEB, NWS & DB)பராமரிப்புப் பணிகளுக்குப் பொறுப்பாக இருத்தலும்.

 

உப பிரிவுகளும் அவற்றின் பங்களிப்பும்

மின்சாரம் – மின்சார உபகரணம் மின்வலு மற்றும் பொருத்துகைகள் (மின் உயர்த்திகள், வளிச்சீராக்கிகள், CCTV, MATV, ஒலி ஒருங்கிணைப்பு முறைமைகள், சபாமண்டபம் மற்றும் குழு அறைகள்) ஆகியவற்றைப் பராமரித்தலும் திருத்தலும், மேலும் அவற்றிற்குப் பொறுப்பாக இருத்தலும் பாராளுமன்றக் கட்டிடத்தின் மின்வலு மற்றும் பொருத்துகைகளுக்குப் பொறுப்பாக இருத்தல். புதிய நிர்மாணப் பணிகளுக்காக மனுக்கோரல் ஆவணங்களைத் தயாரித்தல்.

சிவில் - பாராளுமன்றக் கட்டிடத்தின் திருத்த வேலைகள் மற்றும் புதுப்பிப்புப் பணிகளுக்குப் பொறுப்பாக இருத்தல். புதிய கட்டிடத்தொகுதியின் நிர்மாணப் பணிகளை கவனித்தல், மேலும் புதிய நிர்மாணங்களுக்கான மனுக்கோரல் ஆவணங்களைத் தயாரித்தல்.

 

இணைப்புப் பொறியியலாளர் திணைக்களத்தின் பணிகள்

பாராளுமன்ற கட்டிடத்தொகுதி, கௌரவ சபாநயகரின் வதிவிடம், மும்தாஸ் மகால், மாதிவெல வீடமைப்புத் தொகுதி, நுவரெலியாவிலுள்ள சேனாதிபதி இல்லம், ஜயவடனகமவிலுள்ள பணியாட்களின் விடுதிகள் மற்றும் பாராளுமன்ற பொலிஸ் விடுதிகள் ஆகியவற்றின் தொழில்நுட்பத்தன்மை வாய்ந்த (தகவல் தொழில்நுட்பம் தவிர்ந்த) அனைத்து பணிகளுக்கும் பொறுப்பாக இருத்தல்.

  1. மின்சார, இலத்திரனியல் மற்றும் பொறிமுறை உபகரணங்களையும் முறைமைகளையும் கொள்வனவு செய்வதற்கான கேள்விப்பத்திரங்கள் தயாரித்தல்.
  2. 2சிவில் நிர்மாணங்கள், பிரிவிடுதல், திருத்தங்கள் மற்றும் அலுவலக தளபாடங்கள் ஆகியவற்றின் ஒப்பந்தங்களுக்கான கேள்விப்பத்திர ஆவணங்களைத் தயாரித்தல்.
  3. கொள்வனவுக் குழு மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுக்கள் ஆகியவற்றில் தவிசாளராக அல்லது உறுப்பினராக சேவையாற்றல்.
  4. 4. பாராளுமன்ற கட்டிடத்தொகுதி, கௌரவ சபாநாயகரின் வதிவிடம், மாதிவெல வீடமைப்புத் தொகுதி, நுவரெலியாவிலுள்ள சேனாதிபதி இல்லம், ஜயவடனகமவிலுள்ள பணியாட்களின் விடுதிகள் மற்றும் பாராளுமன்ற பொலிஸ் விடுதிகள் ஆகியவற்றில் புதிய சிவில் நிர்மாணங்கள் மற்றும் சிவில் பராமரிப்பு வேலைகள் தொடர்பான செயற்பாடுகளை மேற்பார்வை செய்தல்.
  5. பாராளுமன்ற சபைக்கூடத்தின் ஒலி ஒருங்கிணைப்பு முறைமை மற்றும் குழு அறைகளில் காணப்படும் ஏனைய ஒலி முறைமைகள் ஆகியவற்றின் தொழிற்பாடு மற்றும் பேணுகை தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தல்.
  6. பாராளுமன்ற நடவடிக்கைகளின் ஒலி / ஒளிப்பதிவு, திருத்தம் செய்தல், அதிகாரமளித்தல் மற்றும் DVD, VCD, CD ஆகியவற்றைப் பிரதிபண்ணல் ஆகியவற்றை உள்ளிட்ட பாராளுமன்ற சபாமண்டபத்தில் உள்ள CCTV முறைமையின் தொழிற்பாடு மற்றும் அவற்றைப் பேணுதல் தொடர்பான செயற்பாடுகளின் மேற்பார்வை.
  7. மத்திய வளிச்சீராக்கல் முறைமை, CCTV பாதுகாப்பு கண்காணிப்பு முறைமை, MATV முறைமை, பிரதான தொலைபேசிப் பரிவர்த்தனை, பொது உரையாற்ற முறைமை / வாகன அழைப்பு முறைமை, வாக்கழைப்பு மணி முறைமை, குளிர் அறைகள் உட்பட அனைத்து சமையலறை உபகரணங்கள் ஆகியவற்றின் கிரமமான பராமரிப்புப் பணிகளை நிறைவேற்றல்.
  8. இலங்கை மின்சாரசபை மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை போன்ற துணைத்திணைக்களங்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருத்தல்.

 



திணைக்களத் தலைவர்

பெயர்

Adikari DLD

தொலைபேசி

0332232987

மின்னஞ்சல்

lalith_a@parliament.lk







பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks