07

E   |   සි   |  

1   கௌரவ சபாநாயகர்


2   பிரதம அமைச்சர்


3   எதிர்க்கட்சித் தலைவர்


4   பாராளுமன்றச் செயலாளர் நாயகம் (பாராளுமன்றம் குழுநிலைக்குச் செல்லும்போது, சபாநாயகர் தனது உயர்ந்த ஆசனத்திலிருந்து இறங்கி பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் ஆசனத்தில் அமர்வார்)


5   பிரதிப் பாராளுமன்றச் செயலாளர் நாயகம்


6   உதவிப் பாராளுமன்றச் செயலாளர் நாயகம்


7   பாராளுமன்றச் சபாபீடம்


8   செங்கோல் (பாராளுமன்றம் குழுநிலைக்குச் செல்லும்போது, செங்கோலானது சபாபீடத்தின் கீழே வைக்கப்படுகின்றது)


9   ஆளும்கட்சி ஆசனங்கள்


10   எதிர்க்கட்சி ஆசனங்கள் (ஆளும்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை, ஆளும் கட்சியின் பக்கத்திலுள்ள ஆசனங்களின் எண்ணிக்கையை விஞ்சும் போது, மேலதிக எண்ணிக்கையினருக்கு எதிர்க்கட்சியின் பக்கத்தில் முன்வரிசை தவிர்ந்த ஆசனங்கள் ஒதுக்கப்படும்)


11   சபாமண்டப எல்லைக்கோடு


12   படைக்கலச் சேவிதர்


13   பிரதிப் படைக்கலச் சேவிதர்


14   ஹன்சாட் உத்தியோகத்தர்கள்


15   பாராளுமன்ற நிர்வாக உத்தியோகத்தர்கள்


16   பத்திரிகையாளர் கலரி


17   கலரி-1


18   கலரி-2


19   கலரி-3


20   சபாநாயகரின் கலரி (இக் கலரியானது சிறப்புரிமை பெற்ற விருந்தினர்களுக்கென ஒதுக்கப்பட்டதாகும்)


இருக்கை வசதி

சபாமண்டபத்தினுள் உறுப்பினர்களுக்கான இருக்கை இட வசதியானது படிப்படியாக உயர்ந்து செல்லக் கூடியவாறு மேசைகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. வளிச் சீராக்கம் செய்யப்பட்டுள்ள சபாமண்டபம் 232 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இருக்கைகளைக் கொண்டுள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம் தெரிவுசெய்யப்பட்ட இருநூற்று இருபத்தைந்து உறுப்பினர்கள் ஐந்து வருடங்களுக்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பர். பாராளுமன்றத்தின் ஆக்க அமைவு பற்றி அரசியலமைப்பின் 98ஆம், 99 ஆம் உறுப்புரைகள் கூறுகின்றன. நூற்றுத் தொண்ணூற்றாறு உறுப்பினர்கள் பொதுத் தேர்தலொன்றில் மக்களால் நேரடியாகத் தெரிவுசெய்யப்பட, எஞ்சிய 29 ஆசனங்களும் அத் தேர்தலில் போட்டியிட்ட ஒவ்வொரு அரசியல் கட்சியும் / சுயேச்சைக் குழுவும் பெற்ற வாக்குகளின் விகிதாசாரத்தின் அடிப்படையில் அவற்றுக்கிடையே பங்கிடப்படுகின்றன. எல்லாக் கட்சிகளுக்கும் குழுக்களுக்கும் சபையில் அவற்றின் வலிமையின் விகிதாசாரத்தில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசாங்கக் கட்சிகளின் ஆசனங்கள் அக்கிராசனத்தின் வலப்புறமாகவும் எதிர்க்கட்சிகளின் / குழுக்களின் ஆசனங்கள் இடப்புறமாகவும் உள்ளன.

மேலும், சபாமண்டபத்தின் கீழ்ப்பகுதியில் சில விசேட நோக்கங்களுக்கான கூடங்கள் உள்ளன. ஹன்சாட் அலுவலர்களுக்கான கூடமும், பாராளுமன்ற நிர்வாக அலுவலர்களுக்கான கூடமும், முறையே அக்கிராசனத்துக்கு வலப்புறமாகவும் இடப்புறமாகவும் உள்ளன.

சபாமண்டபத்தின் இருபுறமும் அகலமான முகப்புக் கூடங்கள் அமைந்துள்ளதோடு அதனூடாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாமண்டபத்தினுள் பிரவேசிப்பர். இக்கூடத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து உரையாடக்கூடியவாறு வசதியான இருக்கைகளும் தேவையான ஏனைய சாதனங்களும் வழங்கப்பட்டுள்ளன.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks