E   |   සි   |  

சமீபத்திய செய்திகள்

ஜூலை 28, 2025

கிழக்கு மாகாணத்தின் உயர்தரப் பரீட்சையில் திறமை செலுத்திய மாணவர்களை ஜனாதிபதி நிதியம் கௌரவித்தது

•    க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் திறமை  செலுத்திய   360 மாணவர்களுக்கு தலா ரூ. 100,000 வழங்கப்பட்டது ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் கிழக்கு மாகாண நிகழ்வு  நேற்று (27) மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த நுண்கலை பீடத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயர் பெறுபேறுகளைப் பெற்ற அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த 6 பாடப் பிரிவுகளின் கீழ் உயர் பெறுபேறுகளைப் பெற்ற  10 மாணவர்கள் வீதம் 360 மாணவர்களுக்கு தலா ரூ. 100,000 ஊக்குவிப்புக் கொடுப்பனவு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்காக ஜனாதிபதி நிதியம் 36 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது. மாகாண மட்டத்தில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் சமீபத்தில் வட மாகாணத்தில் தொடங்கப்பட்டது. அதன் இரண்டாவது திட்டம் தென் மாகாணத்திலும் மூன்றாவது திட்டம் கிழக்கு மாகாணத்திலும் செயல்படுத்தப்பட்டது. எதிர்காலத்தில் இந்தத் திட்டத்தை ஏனைய மாகாணங்களிலும் செயல்படுத்த ஜனாதிபதி நிதியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. நிகழ்வில் கருத்துத்தெரிவித்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, ஜனாதிபதி நிதியம் இதுவரை உதவி தேவையான யாரையும் கைவிடவில்லை என்றும், நாட்டின் பிள்ளைகளின்  கல்விக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார். ஜனாதிபதி நிதியம் யாருடைய தனியார் நிதியமல்ல என்றும், அது நாட்டு மக்களின் பங்களிப்புகளுடன் இயக்கப்படும் நிதியம் என்றும் சுட்டிக்காட்டிய சபாநாயகர், அதன் நன்மைகள் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார். கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்த லால் ரத்னசேகர மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்த நிகழ்வில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜே.ஜே. முரளிதரன் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், கிழக்கு மாகாண அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படைத் பிரதானிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மருந்து பற்றாக்குறை தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

மிகவும் அத்தியாவசிய மருத்துப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை - சுகாதார அமைச்சின் அதிகாரிகள்   மருந்து பற்றாக்குறை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வினவப்பட்டது. இக்குழு பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஹால் அபேசிங்ஹ தலைமையில் அண்மையில் (ஜூலை 23) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன.  கடந்த வருடங்களில் கொள்முதல் நடவடிக்கையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தற்போதைய மருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். எனினும், 2026 ஆம் ஆண்டிற்கான கொள்முதல் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டில் எந்தப் பற்றாக்குறையும் இருக்காது என்றும் அவர்கள் குழுவில் உறுதியளித்தனர். அத்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள், நாட்டில் 80% முதல் 90% வீதமான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். அத்துடன், மிகவும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களின் இருப்பு குறித்து குழு வினவியத்துடன், தற்போது மிகவும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும், இலங்கை அரசமருந்தாங்கற் கூட்டுத்தாபனம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை, இலங்கை ஆயுள்வேத மருந்துகள் கூட்டுத்தாபனம் மற்றும் விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலை ஆகியவற்றின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருடாந்த அறிக்கைகளையும் குழு பரிசீலித்து அங்கீகரித்தது. இந்த அறிக்கைகளை மதிப்பாய்வு செய்யும் போது, இந்த நிறுவனங்கள் தொடர்பான பதிலளிக்கப்படாத கணக்காய்வு கேள்விகள் குறித்து குழு வினவியது. கணக்காய்வு அவதானிப்புகளுக்கு சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான பதில்களை உறுதி செய்வதற்காக அமைச்சுக்குள் ஒரு உள்ளக மீளாய்வு பொறிமுறையை நிறுவ வேண்டும் என குழுவின் தலைவர் பரிந்துரைத்தார். பிரதி அமைச்சர் முனீர் முலாபர், பாராளுமன்ற உறுப்பினர்களான (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேக்கர, அமிர்தநாதன் அடைக்கலநாதன், (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனா, சமன்மலீ குணசிங்ஹ, (பேராசிரியர்) சேன நாணாயக்கார, (வைத்தியர்) எஸ். ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் ஜகத் மனுவர்ண ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் (வைத்தியர்) அனில் ஜாசிங்க உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

ஜூலை 28, 2025

பாராளுமன்ற நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு வெற்றிகரமாக அமைந்தது – பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு சபாநாயகரிடம் தெரிவிப்பு

பாராளுமன்ற நடைமுறைகளைப் பலப்படுத்தும் நோக்கில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றப் பணியாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சித் திட்டம் வெற்றியளித்திருப்பதாக இதனை முன்னெடுத்த பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களிடம் தெரிவித்தது. கடந்த 22ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மூன்று நாட்கள் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் பின்னர் இதன் முன்னேற்றம் தொடர்பில் சபாநாயகரைத் தெளிவுபடுத்தும் நோக்கில் இக்குழுவினர் அண்மையில் (ஜூலை 24) அவரைச் சந்தித்தபோதே இவ்வாறு கருத்துத் தெரிவித்தனர். இலங்கைப் பாராளுமன்றத்துடன் இணைந்து பாராளுமன்ற நடைமுறைகளைப் பலப்படுத்தும் நோக்கில், ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை, பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் ஐக்கிய இராச்சியக் கிளை (CPA UK) மற்றும் ஜனநாயகத்திற்கான வெஸ்மின்ஸ்டர் மன்றம் (WFD) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்தமைக்காக சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்தார். ஐக்கிய இராச்சியத்தின் மக்களை உறுப்பினரும், ஜனநாயகத்திற்கான வெஸ்மின்ஸ்டர் மன்றத்தின் தலைவருமான யஸ்மின் குரேஷி (Yasmin Qureshi) அவர்களின் தலைமையிலான இந்தத் தூதுக் குழுவில், ஐக்கிய இராச்சியத்தின் மக்களை உறுப்பினர்களான ஜெமி ஸ்டோன் (Jamie Stone), போலட் ஹமில்டன் (Paulette Hamilton), அன்ரூ ஸ்னோஃவ்டன் (Andrew Snowden) உள்ளிட்ட பிரதிநிதிகள் அங்கம் வகித்திருந்தனர்.  இந்த நிகழ்ச்சியின் போது, புதிய உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகள் தங்கள் அறிவு மற்றும் அனுபவங்களை பிரித்தானியப் பாராளுமன்றப் பிரதிநிதிகள் குழுவுடன் பகிர்ந்து கொண்டதன் ஊடாகப் பாராளுமன்ற நடைமுறைகள் பற்றிய புரிதலைப் பெற்றுக் கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கிடைத்த வாய்ப்பு மற்றும் உறுப்பினர்களின் வகிபாகத்தில் காணப்படும் சவால்கள், பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் செயற்பாடுகள், பாராளுமன்ற பணியாளர்களின் வகிபாகம், குழுக்களின் விசாரணைச் செயற்பாடுகள், குழு அறிக்கைகளைத் தயாரித்தல், ஒழுக்கக் கோவை மற்றும் தரநிலைகள், வரவுசெலவுத்திட்டம் மற்றும் நிதிக் கட்டுப்பாடு, வளங்கள் மற்றும் டிஜிட்டல் கருவிகளின் ஊடான தொடர்பாடல், மக்களின் பங்கேற்பு மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான சமூக உறவுச் செயற்பாடுகளை எவ்வாறு பயன்படுத்தலாம் போன்றவை உள்ளிட்ட விடயங்களில் மூன்று நாட்களும் பல்வேறு மட்டத்திலான அனுபவப் பகிர்வுகளும், கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்றன. அத்துடன், இந்த நிகழ்ச்சியின் கீழ் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவர், கௌரவ அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் மற்றும் ஒன்றியத்தின் உறுப்பினர்களுடனும் பிரித்தானியக் குழுவினர் கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டனர். அத்துடன், திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான ஒன்றியத்தின் இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராஜபுத்திரன் இராசமாணிக்கம் உள்ளிட்ட ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில், திறந்த பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கை திறந்த அரசாங்கப் பங்குடமையின் தீவிர உறுப்பினராக இருப்பதன் முக்கியத்துவத்தை இணைத் தலைவர் இங்கு நினைவுபடுத்தினார். இந்நிகழ்ச்சித் திட்டத்தில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பதவியணித் தலைமையதிகாரியும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, பிரதிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன மற்றும் பாராளுமன்ற திணைக்களங்களின் பிரதானிகள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

ஜூலை 28, 2025

உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில்  கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. குறித்த துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி அவர்களின் தலைமையில் கடந்த ஜூலை 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு ஆராயப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கல்விச் சேவைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர். உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சின் அதிகாரிகள் குழுவுக்கு நீண்ட விளக்கத்தை வழங்கியதுடன், கடந்த காலங்களில் இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அவர்கள் விபரித்தனர். கல்வித் துறையில் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு கடந்த காலங்களில் செயற்பட்ட சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்கள் எனப் பலரையும் இணைத்துக் கொண்டு உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை விரிவான முறையில் ஆராய எதிர்பார்த்திருப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார். கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பைக் குழு முழுமையாக வழங்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். கல்வித் துறையின் மறுசீரமைப்பின் போது உரிய முறையில் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதன்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதேவேளை, சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலம் குறித்தும் இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது. சமுர்த்தி வங்கியின் செயற்பாடுகள் குறித்து குழு கேட்டறிந்துகொண்டதுடன், குறித்த சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்கு முன்வைக்கவும் குழு அனுமதி வழங்கியது.இந்தக் கலந்துரையாடல்களில் குழுவின் கௌரவ உறுப்பினர்களான சுனில் ராஜபக்ஷ, சானக மாதுகொட, துரைராசா ரவிகரன், சட்டத்தரணி நிலூஷா லக்மாலி கமகே, கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.

சபை அலுவல்கள்

அனைத்தும்  

ஜூலை

30

பாராளுமன்ற நாட்காட்டி

அமர்வு நாட்கள்

முழு நாட்காட்டி

செய்திமடல்களுக்கு பதிவு செய்யவும்

பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks