07

E   |   සි   |  

பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பாராளுமன்றத்தின் பிரதம நிறைவேற்று அலுவலராவார். அவர் அரசியலமைப்புப் பேரவையின் இணக்கத்துடன், ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார். பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பதவி, அரசியலமைப்பு ரீதியாகப் பாதுகாக்கப்பட்ட ஒரு பதவியாகும். பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பிரதான பணிகளில் ஒன்று, பாராளுமன்ற நடவடிக்கை முறை, சட்டமூலங்கள் அரசியலமைப்புக்கு இயைபாகவிருத்தல், நிலையியற் கட்டளைகள், சிறப்புரிமைகள் ஆகியன தொடர்பான விடயங்களிலும், பாராளுமன்ற நடவடிக்கை பற்றிய வேறு ஏதேனும் விடயங்களிலும் சபாநாயகர் மற்றும் ஏனைய தலைமை தாங்கும் அலுவலர்களுக்கு, ஆலோசனை வழங்குதலாகும். பாராளுமன்றச் செயலாளர் நாயகம் அவரது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்குப் பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகமும் உதவுவர். செயலாளர் நாயகம் பாராளுமன்றத்தின் பிரதம நிருவாகத்தரும் கணக்கீட்டு அலுவலருமாவார். பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பணியாளர்கள் சபாநாயகரின் அங்கீகாரத்துடன் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்படுவர். செயலாளர் நாயகம் அல்லது அவரின் நியமத்தர் பாராளுமன்றத்தினால் தாபிக்கப்படும் எல்லாக் குழுக்களுக்கும் செயலாளராகப் பணியாற்றுவார்.

 

தற்போதைய பாராளுமன்ற செயலாளர் நாயகம் பற்றி

திருமதி குஷானி அனுஷா ரோஹணதீர

தற்போது பாராளுமன்றச் செயலாளர் நாயகம் என்ற உயர் பதவியை வகிக்கும் திருமதி குஷானி அனுஷா ரோஹணதீர 2023 ஆம் ஆண்டில் இவ்வுயர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

பாராளுமன்ற உத்தியோகத்தராக 1999.03.02 ஆம் திகதி தமது பாராளுமன்றத் தொழிலை ஆரம்பித்த இவர் 2012 ஆம் ஆண்டில் உதவிச் செயலாளர் நாயகம் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் பாராளுமன்றத்தின் பல்வேறு அலுவலகங்களில் உதவிப் பிரதான உத்தியோகத்தர், பிரதிப் பிரதான உத்தியோகத்தர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். 2020 ஆம் ஆண்டில் பதவியணிப் பிரதானி மற்றும் பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகம் என்ற பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டார்.

ஆரம்ப மற்றும் இரண்டாம்நிலைக் கல்வியை அம்லாங்கொட தர்மாஷோக்க கல்லூரியில் பூர்த்தி செய்த இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞானத்தில் இளவிஞ்ஞானமானிப் பட்டத்தையும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமானிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் சட்டத்தரணியுமாவார்.

பாராளுமன்ற சேவையில் இணைந்துகொள்வதற்கு முன்னர் சம்பத் வங்கியின் கனிஷ்ட நிறைவேற்று அதிகாரியாகவும், என்வயர்ன்மென்டல் பவுன்டேஷன் நிறுவனத்தில் கனிஷ்ட விஞ்ஞானியாகவும், தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளரின் (தொலைத்தூரக் கல்வி) செயலாளராகவும், இன்போமட்டிக்ஸ் தனியார் நிறுவனத்தின் நிலைய இணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்

மேலும் இவர் இந்திய லோக் சபாவின் பாராளுமன்ற கற்கைகள் மற்றும் பயிற்சிகள் நிறுவனம், கனடாவின் மொன்ரியல் மெக்கில் பல்கலைக்கழகம் மற்றும் ஏனைய நாடுகளிலுள்ள பல்வேறு நிறுவனங்களில் பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் செயற்பாடுகள், சட்டவாக்கம் என்பன உள்ளிட்ட விடயங்களில் விரிவான பயிற்சியைப் பெற்றுள்ளார்.

இவர் பட்டய உயர்தொழில் முகாமையாளர்கள் நிறுவனத்தின் சக உறுப்பினரும், இலங்கை சட்டத்தரனிகள் சங்கத்தின் உறுப்பினரும் ஆவார். இவர், இலங்கை வங்கி, பட்டய உயர்தொழில் முகாமையாளர்கள் நிறவனம், “நீதிய” சஞ்சிகை மற்றும் பாராளுமன்றத்தின் சஞ்சிகைகள், செய்திப்பத்திரிகைகள் என்பவற்றில் பாராளுமன்ற நடைமுறைகளும் செயன்முறைகளும் பற்றிய பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

சட்டத்தரணி ஹரிகுப்தா ரோஹணதீர அவர்களை மணந்துள்ள இவர் மூன்று பிள்ளைகளின் தயாவார். இவர் சமையல் கலையிலும் மற்றும் பாடுவதிலும் ஆர்வமுடையவர்.


தற்போதைய பாராளுமன்ற செயலாளர் நாயகம்

தொடர்புகளுக்கு

பெயர்

Rohanadeera KA

மின்னஞ்சல்

kushani_r@parliament.lk

தொலைபேசி

0112862365


முன்னாள் பாராளுமன்ற செயலாளர்கள் நாயகம்


பாராளுமன்றச் செயலாளர் நாயகம் (1978.09.07 - இன்றுவரை)

(2002 ஆகஸ்ட் 1 ஆந் திகதியிலிருந்து 11 ஆந் திகதிவரை பாராளுமன்றமானது செயலாளர் நாயகமின்றியே செயற்பட்டது)


தேசிய அரசுப் பேரவையின் செயலாளர் (22 மே 1972 - 07 செப்டெம்பர் 1978)





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks