E   |   සි   |  

முதலாவது மக்கள் கருத்தறி வாக்கெடுப்பு

வாக்கெடுப்புத் திகதி

1982 டிசம்பர் 22 (1982, நவம்பர் 14, வர்த்தமானி 219/2)

பிரேரணை

“முதலாவது பாராளுமன்றம் முன்னதாகவே கலைக்கப்பட்டாலன்றி, 1989 ஆகஸ்ட் 4 ஆம் திகதிவரை தொடர வேண்டுமென்பதுடன் அதன்பின்னர் அது கலைக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்னும் ஏற்பாட்டை ஏனையவற்றிற்கு மாத்திரம் கொண்டிருக்கின்ற 1982 நவம்பர் 13 ஆம் திகதிய 218/23 ஆம் இலக்க விஷேட வர்த்தமானியில் பிரசுரமான ‘அரசியல் அமைப்பின் நான்காவது திருத்தம்’ எனத் தலைப்பிடப்பட்ட சட்டமூலத்தை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?"

இப்பிரேணைக்கு ஆதரவாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை (விளக்கு) 3,141,223
இப்பிரேணைக்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை (பானை) 2,605,983
செல்லுபடியான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 5,747,206
நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 21,456
வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 8,145,015

இரண்டாவதுமக்கள் கருத்தறி வாக்கெடுப்பு

வாக்கெடுப்புத் திகதி

2001 ஆகஸ்ட் 21 (2001 ஜூலை 10, வர்த்தமானி 1192/16)

பிரேரணை

“தேசிய முக்கியத்துவமும் அவசியமும் வாய்ந்த புதிய அரசியல் அமைப்பொன்று நாட்டிற்குத் தேவையா?"

வாக்கெடுப்புத் திகதி (2001 ஒற்றோபர் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. (2001-08-07 ஆம் திகதிய 1196/18 ஆம் இலக்க வர்த்தமானி)

2001.08.07 ஆம் திகதிய 1196/18 ஆம் இலக்க வர்த்தமானியிலிருந்து வேறுபடுவதால் 2001-07-10 ஆம் திகதிய 1192/16 ஆம் இலக்க வர்த்தமானியில் அச்சிடப்பட்ட பிரகடனத்தை 1199/30 ஆம் வர்த்தமானி மூலம் 2001.09.02 ஆம் திகதியன்று மீளப்பெறுதல்






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks