07

E   |   සි   |  

தனியார் உறுப்பினர் என்பது, சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பிரதம அமைச்சர், அமைச்சரவையின் அமைச்சர்கள், அமைச்சரவையல்லாத அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்றச் சபை முதல்வர், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான் மற்றும் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் ஆகிய எந்தவொரு பதவியையும் வகிக்காத உறுப்பினர் ஆவார்.

எவரேனும் தனியர் உறுப்பினரால் சமர்ப்பிக்கப்படும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் முக்கிய விடயங்கள் பற்றிய பிரேரணை தனியார் உறுப்பினர்களின் பிரேரணை என அறியப்படும். அத்தகைய பிரேரணைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் அல்லது நிராகரிக்கப்படும்.

அவ்வாறான பிரேரணைகள் முதலாவதாக பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்படல் வேண்டும். தனியார் உறுப்பினர்களின் பிரேரணைகள் பாராளுமன்றத்தில் விவாதத்திப்பதற்குக் குறிப்பீடு செய்த தினத்திற்கு முன்னர் பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகம் அல்லது அனுபந்தத்தின் மூலம் அவை கிடைக்கப்பெறும் ஒழுங்கில் அறிவிக்கப்படும்.

எல்லா மாதங்களிலும் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் முதலாவது வாரத்தின் வெள்ளிக்கிழமை தனியார் உறுப்பினர்கள் பிரேரணைகள் முன்னுரிமை பெறும்.

எனினும், தனியார் உறுப்பினர்களின் பிரேரணைகள் விவாதத்திற்கு எடுக்கப்படுவது பற்றி பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவினால் தீர்மானிக்கப்படும்.

சபாநாயகரினால் உறுப்பினரின் பெயர் அழைக்கப்பட்ட பின்னர், அவர் பிரேரணையைச் சமர்ப்பிப்பார். பின்னர் வேறொரு உறுப்பினரால் அப்பிரேரணை வழிமொழியப்பட்டு விவாதிக்கப்படும். இருந்தும் ஏற்புடைய உறுப்பினர் வருகை தந்திராவிடின், முறையாகத் தத்துவமளிக்கப்பட்ட வேறொரு உறுப்பினர் அத்தகைய உறுப்பினரின் அப்பிரேரணையைச் சமர்ப்பிக்க முடியும். இல்லையேல் அப்பிரேரணை வறிதாகும்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கமைய, தனியார் உறுப்பினரொருவரின் 10 பிரேரணைகள் மாத்திரம் அவரின் பெயரில் பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகம் அல்லது அனுபந்தத்தில் சோ்த்துக்கொள்ளப்படும்.

தனியார் உறுப்பினர்களின் பிரேரணைகளை விவாதிப்பதற்கான நேர ஒதுக்கீடு

தனியார் உறுப்பினர் பிரேரணைகள் அனைத்தும் சபையில் ஒரு மணி நேரம் விவாதிக்கப்படும். பிரோிக்கும் உறுப்பினருக்கு 10 நிமிடங்களும் வழிமொழியும் உறுப்பினருக்கு 05 நிமிடங்களும், ஏனைய உரை நிகழ்த்தும் உறுப்பினர்களுக்கு 05 நிமிடங்களும் பதில் வழங்குவதற்கு ஏற்புடைய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருக்கு 10 நிமிடங்களும் பிரோித்த உறுப்பினருக்கு மீண்டும் 05 நிமிடங்களும் என்றவாறு குறிப்பிட்ட ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும்.

ஏதேனும் தனியார் உறுப்பினர் பிரேரணையொன்று அங்கீகரிக்கப்பட்டோ அல்லது அங்கீகரிக்கப்படாமலோ பாராளுமன்றக் கூட்ட அறிக்கையில் சோ்த்துக்கொள்ளப்படும்.

ஏற்புடைய தினத்திற்குரிய தனியார் உறுப்பினர் பிரேரணையின் விவாதத்திற்குப் பின்னர் மேலும் பின்னொரு தினத்தில் விவாதிப்பதற்கு எஞ்சியுள்ள பிரேரணைகள் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கமைய அறிவிப்பதன் பொருட்டு தனியார் உறுப்பினர் பிரேரணை விவாதத்திற்கு எடுக்கப்படும் வெள்ளிக்கிழமையன்றே அடுத்த தினம் வரை அறிவிக்கப்பட்டு பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் அல்லது அனுபந்தத்தில் சோ்த்துக்கொள்ளப்படும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks