07

E   |   සි   |  


கெளரவ உறுப்பினர்களின் பாராளுமன்ற உரைகளையும் கூட்ட நடவடிக்கைகளையும் “ஹன்சாட் அறிக்கை” மற்றும் பாராளுமன்றக் குழுக்களின் கூட்ட நடவடிக்கைகளையும் சொல்லுக்குச் சொல் அறிக்கையிடுதல் ஹன்சாட் திணைக்களத்தின் கடமைப் பொறுப்பாகும்.

ஹன்சாட் பதிப்பாசிரியர், ஹன்சாட் பிரதிப் பதிப்பாசிரியர்கள், ஹன்சாட் உதவிப் பதிப்பாசிரியர்கள், சிரேஷ்ட ஹன்சாட் அறிக்கையாளர்கள், ஹன்சாட் அறிக்கையாளர்கள் ஆகியோரைக் கொண்ட இத்திணைக்களம் குழு அறிக்கையாளர்கள் அலகினையும் சூசிகை உத்தியோகத்தர் அலகினையும் மற்றும் ஒலிப்பதிவுப் பிரிவினையும் உள்ளடக்கியுள்ளது.

ஒவ்வொரு மொழிப்பிரிவுக்கும் (சிங்களம்/தமிழ்/ஆங்கிலம்) ஒருவராக மூன்று பிரதிப் பதிப்பாசிரியர்களும், சிங்கள மொழிக்கு ஐவரும் ஆங்கில மொழிக்கு ஐவரும் தமிழ் மொழிக்கு ஒருவருமாக பதினொரு உதவிப் பதிப்பாசிரியர்களும், 18 சிங்கள அறிக்கையாளர்கள், 18 ஆங்கில அறிக்கையாளர்கள், 5 தமிழ் மொழி அறிக்கையாளர்கள் என்றவகையில் 41 அறிக்கையாளர்களும் ஹன்சாட் பதிப்புப் பணியாளர்களாகக் கடமையாற்றுகின்றனர்.

பாராளுமன்ற விவாதங்களின்போது கூறப்படும் கேட்கக்கூடிய ஒவ்வொரு வார்த்தையும் ஹன்சாட் அறிக்கையாளர்களினால் அறிக்கையிடப்பட்டு, தயாரிக்கப்படும் நகல் பிரதிகள் உதவிப் பதிப்பாசிரியரின் மேற்பார்வைக்காகவும் திருத்தங்களுக்காகவும் சமர்ப்பிக்கப்படும். திருத்தப்பட்ட பிரதி பின்னர் ஒவ்வொரு துறையினதும் பிரதிப் பதிப்பாசிரியரிடம் சமர்ப்பிக்கப்படும். அவர்கள் திருத்தங்கள் செய்யப்பட்ட நடவடிக்கைகளை மீண்டும் ஆராய்ந்து, விரும்பத்தக்கதெனத் தாம் கருதும் மேலதிக திருத்தங்களை மேற்கொள்வர்.

அதனையடுத்து, அனைத்துச் செயல் நடவடிக்கைகளும் இறுதிப் பிரதிக்குப் பொறுப்பாகவுள்ள ஹன்சாட் பதிப்பாசிரியருக்கு அனுப்பப்பட்டு, அவர் மூலம் அரசாங்க அச்சகத்திற்கு அச்சிடலுக்காக அனுப்பப்படும்.

அதனையடுத்து“பிழை திருத்தப்படாத பிரதி” என அழைக்கப்படும் ஆரம்பப் பதிப்பு கெளரவ உறுப்பினர்களினதும் பொதுமக்களினதும் பார்வைக்கு விடப்படும். இறுதியாக ஹன்சாட் திணைக்களம் பிழை திருத்தம் செய்யப்படாத பிரதியைச் சரிபார்த்து, கெளரவ உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட ஏதேனும் திருத்தங்களையும் (இருப்பின்) உள்ளடக்கி, அதற்கான சூசிகைகளுடன் இறுதிப்பதிப்புக்கும் கட்டுவதற்குமாக மீண்டும் அரசாங்க அச்சகத்துக்கு அனுப்புகின்றது.

ஹன்சாட் அறிக்கையாளர்கள் சபை நடவடிக்கைகளை அறிக்கையிடுவதுடன், குழு அறிக்கையாளர்களுடன் இணைந்து குழு நடவடிக்கைகளையும் அறிக்கையிடுவர்.

திணைக்களத்தின் சூசிகைப் பிரிவு ஐந்து அலுவலர்களைக் கொண்டுள்ளது. அவர்களின் பிரதான கடமைகளாவன, ஹன்சாட் பதிவுகளுக்கான நிரந்தர சூசிகையொன்றைத் தயாரித்தல், ஒவ்வொரு உறுப்பினரினதும் உரைகளின் நேரப்பதிவு மற்றும் தற்போதைய சூசிகையைப் பேணுதல் என்பனவாகும்.

திணைக்களத்தின் ஒலிப்பதிவுப் பிரிவு ஆறு அலுவலர்களைக் கொண்டுள்ளது. அவர்களின் பிரதான கடமைகளாவன, சபை மற்றும் குழுக்களின் கூட்ட நடவடிக்கைகளை ஒலிநாடாக்களிலும் இறுவட்டுகளிலும் பதிவு செய்வதாகும்.

திணைக்களத்தின் குழு அறிக்கையாளர் பிரிவு 15 அலுவலர்களைக் கொண்டுள்ளது. அவர்களின் பிரதான கடமைகளாவன, அரசாங்கப் பொறுப்புமுயற்சிகள் குழு, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு, உயர் பதவிகள் பற்றிய குழு, தெரிகுழுக்கள் மற்றும் விசேட ஆலோசனைக் குழுக்கள் ஆகியவற்றின் கூட்ட நடவடிக்கைகளை அறிக்கையிடுதலாகும்.

 



திணைக்களத் தலைவர்

பெயர்

Lokukodikara de Silva CN

தொலைபேசி

0112869815

மின்னஞ்சல்

nayani_l@parliament.lk







பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது TekGeeks