பார்க்க

E   |   සි   |  


பாராளுமன்றத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் தேவைகள், தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களத்தினால் கையாளப்படுகின்றன.

பாராளுமன்றத்தின் பாரம்பரியமான ஏழு திணைக்களங்களுடன், இத்திணைக்களமானது 2004 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. இந்த திணைக்களத்தை உருவாக்குவதற்கான எண்ணம், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) மற்றும் உலக வங்கியின் அனுசரணையுடன் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட "இலங்கையில் சனநாயகத்துக்காகவும், அபிவிருத்திக்காகவும் பாராளுமன்றத்தை நவீனமயப்படுத்தல்" ("Modernising Parliament for Democracy & Development in Sri Lanka") என்ற திட்டத்தின் விளைவாக ஏற்பட்டதாகும். இதன்படி, இத்திணைக்களமானது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகாமைத்துவத்தை பாராளுமன்றத்தில் நிறுவுவதற்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளதோடு, "e-Parliament" எனும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மூலோபாய செயன்முறையையும் செயல்படுத்துகின்றது.

e-Parliament என்ற மூலோபாயமானது புகழ்பெற்ற ஆலோசனை நிறுவனமான M/s Ernst & Young இனால் உருவாக்கப்பட்டதோடு, இது நிறுவனத்தினது வளர்ச்சி, உள்ளக செயன்முறைகளின் முன்னேற்றம், பங்குதாரர்களின் திருப்தி மற்றும் திறன் செலவு போன்ற பலவழிகளில் செல்வாக்கு செலுத்துகின்றது. இந்த மூலோபாயமானது, கலாசார நடைமுறையில் மற்றும் வழக்கமான நடைமுறையில் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் எழிலமைப்பில் பல திருத்தங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது.

e-Parliament ஆனது கடந்த ஆண்டுகளில் போது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினை எய்தியுள்ளது.

நோக்கு

பங்கீடுபாட்டாளர்களை தகவல் முறைமைகளினூடாக பலமிக்கவர்களாக்குதல்.

பணி

  • செயற்றிறன் மிக்க தகவல் முகாமைத்துவத்தின் மூலம், செயலகத்தின் செயற்றிறனையும், பயன்மிக்க தன்மையையும் மேம்படுத்துதல்.
  • சராசரிக் குடிமக்களுக்கு, முக்கியமான விடயங்கள் பற்றியும், பாராளுமன்றத் தீர்மானங்கள் பற்றியதுமான அறிவைப் பெற்றுக்கொடுத்தல்.
  • பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் தீர்மானம் இயற்றும் செய்முறையை இலகுவாக்கும் பொருட்டு, சரியான தகவலை, சரியான நேரத்தில் வழங்குதல்.

 

இன்று வரை தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவ திணைக்களமானது திட்டமிட்டுள்ள குறிக்கோள்களை அடைவதற்கு பல்வேறு முயற்சிகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.

 

செயற்பாடுகள்

  • பாராளுமன்றத்தின் அலுவல் தேவைகள் மற்றும் வடிவமைப்பு, உருவாக்கல் மற்றும் தகவல் முறைமையை பயன்கொள்ளச் செய்தல் போன்றவற்றை இனங்காணல் மற்றும் பகுப்பாய்வு செய்தல்
  • தொடர்ச்சியான பணியினை வழங்கும் பொருட்டு வலையமைப்பு மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகளை அவ்வப்போது கண்காணிப்பு செய்தல்
  • சாத்தியத்தன்மை ஆய்வுகள், கருத்திட்ட முன்மொழிவுகளை தயார் செய்தல் மற்றும் தொழில்நுட்ப ஆவணப்படுத்தல்களை மேற்கொள்ளல்
  • கருத்திட்ட முகாமைத்துவம்
  • பாராளுமன்ற இணையத்தளம், கையடக்க தொலைபேசி பயன்பாடு மற்றும் அக நுழைவு உள்ளிட்ட தகவல் முறைமைகளை பராமரித்தல்
  • பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மற்றும் பணியாட்டொகுதியினருக்கு உதவிப் பீட சேவையை வழங்குதல்
  • பாராளுமன்ற உறுப்பினர்களால் அல்லது பணியாட்டொகுதி அலுவலரால் வேண்டப்படுகின்றபோது பயிற்சிநெறிகளை வழங்குதல்
  • உள் மற்றும் வெளி அச்சறுத்தல்களிலிருந்து தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வளங்களை பாதுகாக்க தொடர்ச்சியான உயிர்ப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
  • தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சாதனம் மற்றும் சேவைகளை பராமரித்தல்

 

சேவைகள்

அகநுழைவு (iParliament)

பாராளுமன்றமானது, பாராளுமன்றத்தினுள் உள்ள திணைக்களங்களுக்கிடையே உள்ள தகவல்களை நிருவகிக்கும் பொருட்டு ஓர் அகநுழைவு, இணையசார் உள்ளக முறைமையினை உருவாக்கியது. இதன் பாவனையாளர்களான பணியாட்டொகுதியினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்நுழைவினை உள்ளக அணுகலாக மற்றும் தொலை அணுகலாக பாதுகாப்பான மெய்நிகர் தனியார் வலையமைப்பு (VPN) மூலம் அணுகலாம்.

ஒரு ஒருங்கிணைந்த தகவல் தீர்வு வழங்கக்கூடியதாகவும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களையும் மேம்படுத்தக்கூடியதாகவும் வழங்குவதே இந்த நுழைவின் பிரதான குறிக்கோளாகும்.

இது பாராளுமன்றத்தின் தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவ திணைக்கள உள்ளக பணியாட்டொகுதியினாரால் உருவாக்கப்பட்டதோடு, தொடர்ச்சியாக மேலும் மேம்படுத்தப்படுகின்ற வகையில் பல பயன்பாடுகளையும் அம்சங்களையும் கொண்டுள்ளது. இற்றைவரை இவ்நுழைவானது 30 இற்கு மேற்பட்ட பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.

தொடர்பாடல் உள்கட்டமைப்பு

இந்த தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவ திணைக்களம் ஒரு திறமையான மற்றும் பயனுள்ள முறையில் வலுவான தகவல் பரிமாற்றம் எளிதாக்கும் பொருட்டு பாராளுமன்ற கட்டிடம் முழுவதும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு சேவைகளை வழங்குகிறது. தொடர்பாடல் உள்கட்டமைப்பானது அதிவேக பைபர் பெக்போன், சிக்கலான நிலைமாற்ற உபகரணங்கள், வயர்லெஸ் இணைப்பு, பாதுகாப்பான தொலை அணுகல், பாதுகாப்பான அங்கீகார மற்றும் உயர் வகையில் அத்துமீறி நுழைந்ததை கண்டறியும் வழிமுறைகள் போன்ற அம்சங்களை உள்ளடக்குகின்றது.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பயிற்சிநெறி

பாராளுமன்றம் ஒரு நேரத்தில் 25 க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கவல்ல வளங்கள் கொண்ட ஓர் உள்ளக பயிற்சி நிலையத்தைக் கொண்டுள்ளது. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விழிப்புணர்வு மற்றும் பாராளுமன்ற பணியாட்டொகுதியினர், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி போன்றவை அவர்களது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த மற்றும் மேலும் சிறந்த விளைவைத் தரக்கூடிய விதத்தில் சாதகமாக முறையில் பாராளுமன்ற அலுவல்களுக்கு பங்களிப்பு செய்யும் பொருட்டு தொடர்ச்சியாக வழங்கப்படுகிறது.

இணைய இருப்பு

பாராளுமன்ற இணையதளமானது பாராளுமன்ற தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் பொதுமக்கள் மற்றும் பிற தொடர்புடைய பங்குதாரர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கில் 2006 ல் முதன் முதலாக உருவாக்கப்பட்டது. அதன் பன்மொழி பதிப்பு 2008 இல் ஆரம்பிக்கப்பட்டதுடன் பாராளுமன்றங்களுக்கிடையேயான சங்கத்தின் வழிகாட்டல்களுக்கு அமைவாக ஒரு சீரமைக்கப்பட்ட பதிப்பு, புதிய மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் 2013 இல் வெளியிடப்பட்டது. இந்த இணையதளமானது LK ஆள்கள பதிவகத்தால் 2009, 2010 மற்றும் 2013 இல் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டிகளில் "சிறந்த அரச இணையத்தளம்" இற்கான விருதினை பெற்று கொண்டது.

இலங்கை பாராளுமன்ற கையடக்கத் தொலைபேசி பயன்பாடு

கையடக்கத் தொலைபேசி பயன்பாடானது பொதுமக்களிடையே பிரபல மற்றும் விளைதிறன்மிக்க தொடர்பாடல் முறையாக மாறியுள்ளது. இந்தப் பின்னணியில், பாராளுமன்றம் தனது கையடக்க தொலைபேசி பயன்பாட்டினை 2016 ஜனவரியில் அறிமுகஞ் செய்தது. பாராளுமன்ற சபை அமர்வு நடவடிக்கை முறையினை நேரடியாக அல்லது கோரலின் போது பார்வையிடக்கூடிய வசதி உள்ளடங்கலாக இணையத்தளத்திலுள்ள பாராளுமன்ற தகவல்களை இக்கையடக்க தொலைபேசி பயன்பாடானது வழங்குகின்றது. இது என்ரொயிட், ஐஒஎஸ் (iOS) மற்றும் வின்டோஸ் போன் தளங்களில் கிடைக்கப்பெறும்.

உதவி பீட உதவி மற்றும் பராமரிப்பு சேவைகள்

உதவி பீட உதவி அலுவலக நேரங்களில் பாராளுமன்றத்தில் உள்ள சகல தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது. பயனர்கள், உதவி பீடத்திற்கு அழைத்து தொழில்நுட்ப உதவியினை பெற்று தங்கள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும்.

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கொள்கை உடன்பாடு

நன்கு ஆவணப்படுத்தப்பட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கொள்கையானது நம்பகத்தன்மை, ஒருமைப்பாடு மற்றும் கிடைக்கத்தக்க தகவல்கள் போன்றவற்றை மேம்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

 

ஆதாரங்கள்

பாராளுமன்றத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு - பயன் செலவு பகுப்பாய்வு
பாராளுமன்றத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு - பயன் செலவு பகுப்பாய்வு (சுருக்கம்)



திணைக்களத் தலைவர்

பெயர்

Nawagamuwa NBU

தொலைபேசி

0112776451

மின்னஞ்சல்

buddhika_n@parliament.lk




தொடர்புடைய வளங்கள்

2014-07-01




பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks