பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள விசாலமான புதிய கட்டிடத்தொகுதியில் இலங்கை பாராளுமன்றம் 1982 ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டவுடன், சர்வதேச அங்கீகாரம் பெற்ற முன்னோடி ஐந்து நட்சத்திர ‘லங்கா ஒபரோய் ஹோட்டல்’ நிறுவனத்தின் தொழில்நுட்ப, தொழில்சார் நிபுணத்துவம், ஆலோசனை ஆகியவற்றின் கீழ் உணவூ வழங்கல், வீடுபராமரிப்புத் திணைக்களம் புதுப்பொலிவு பெற்று ஸ்தாபிக்கப்பட்டது. அதற்குப் பின்னர் இத்திணைக்களம் கௌரவ பாராளுமன்ற சபாநாயகரின் பணியாள்தொகுதிக்குள் உள்வாங்கப்பட்டது.
பணிப்பாளரின் (நடவடிக்கைகள்) கீழ் வரும் இத்திணைக்களம், பாராளுமன்றத்தின் நாளந்த நடவடிக்கைகளில் முக்கிய மற்றும் பிரபல்யமான பங்களிப்புச் செய்வதுடன் சமையலறை, உணவகம், வீடு பராமரிப்பு, கணக்குகள் ஆகிய நான்கு பிரதான பிரிவுகளை உள்ளடக்குகின்றது.
ஐந்து பிரத்தியேக உணவகங்கள், போசணைசாலைகள், அதிவிசேட விருந்தினர்களுக்களுக்கான உணவருந்தும் கூடங்கள், ஏனைய சேவைப்பிரிவு வகைகள் ஆகியவை உட்பட பன்னிரண்டு பிரதான உணவு, பான சேவைத்தொகுதிகள் அடிப்படையாக உள்ளன. இவற்றில் ஐந்து தொகுதிகள் நாளாந்தம் தொழிற்படுவதோடு பாராளுமன்ற அமர்வு நடைபெறாத நாட்களில் 1000 முதல் 1200 வரையான நபர்களுக்கு உணவு வழங்குகின்றன.
இத்திணைக்களம் விசேட நாட்களில் முழு அளவிலான அதன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ சபாநாயகர், கௌரவ அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பிர்கள் மற்றும் அவர்களது விருந்தினர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், உயர்பதவியாளர்கள், வருகைதரும் அரசாங்க உத்தியோகத்தர்கள், பாராளுமன்ற பணியாளர் தொகுதியின் சகல உறுப்பினர்கள், ஏனைய உப-திணைக்களங்கள், அரசாங்கக்கட்சி முதற்கோலாசான் மற்றும் எதிர்க்கட்சி முதற்கோலாசான் ஆகியோரின் அலுவலகர்கள், பொலிஸ் திணைக்களம் அடங்கலாக ஏறத்தாழ 1500 நபர்களுக்கு உணவு வழங்குகிறது.
பாரிய தரிப்பிடம் மற்றும் தோட்டப்பகுதிகள் அடங்கலாக அதன் வளாகங்கள், நான்கு மாடி கட்டிடம் ஆகியவற்றின் வீடுபராமரிப்புத் தொடர்பான சகல தேவைகளையும் நிறைவேற்றுவது இத்திணைக்களத்தின் மற்றொரு பிரதான பணியாகும்.
மேலும் பணியாள் உறுப்பினர்கள் தமது கடமைகளை மேற்கொள்வதற்கு உதவியளிக்கும் உயர் தரத்திலான சுகாதார வசதிகள் இதன்மூலம் உறுதி செய்யப்படுகின்றது. பலதரப்பட்ட திறன்கள், பல்லாண்டு கால தொழில்சார் அனுபவம் ஆகியவற்றுடன் தமது கடமைகளை அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் மேற்கொள்ளவும் 300 க்கும் மேற்பட்ட உயர்தராதரமுடைய பணியாட்கள் இத்திணைக்களத்தின் பெறுமதி மிக்க சொத்தாகும்.
பெயர்
R. H. Edirisinghe
தொலைபேசி
0112606198
மின்னஞ்சல்
raj_e@parliament.lk
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks