பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0595/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.

    1. 595/'18

      கௌரவ சுசந்த புஞ்சிநிலமே,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பரவியுள்ள சிறுநீரக நோய் நிலைமையை இனங்காண்டுகொள்வது தொடர்பில் தற்போது இடம்பெற்று வருகின்ற ஆய்வுகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) அவ் ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்ற நிறுவனங்களினதும் ஆய்வாளர்களினதும் பெயர்கள் யாவையென்பதையும்;

      (iii) மேற்படி ஆய்வுகளின் தீர்மானங்கள் கிடைக்கப்படவுள்ள திகதி யாதென்பதையும்;

      (iv) குறிப்பிட்ட ஆய்வுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகளுக்கு மேலதிகமாக இந்நோய் ஏற்படுவதனைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாதென்பதையும்;

      (ii) வடித்த நீரை உற்பத்தி செய்கின்ற Reverse Osmosis Plant களுக்கு மேலதிகமாக பிரித்தானியாவில் அமைந்துள்ள ICON LIFE SAVER எனும் நிறுவனத்தின் ஒரு உற்பத்தியாகக் கூறப்படுகின்ற LIFE SAVER எனும் நீர் வடியொன்று இந்நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) சிறுநீரக நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு அதனை ஏன் பயன்படுத்த முடியாது என்பது தெளிவுபடுத்தப்படுமா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-18

கேட்டவர்

கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2018-09-19

பதில் அளித்தார்

கௌரவ ராஜித சேனாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks