E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0608/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

    1. 608/ '18

      கெளரவ தயாசிறி ஜயசேகர,— சமூக வலுவூட்டல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இன்றளவில் சமுர்த்தி வங்கி வசமுள்ள சொத்துக்களின் அளவு யாது என்பதையும்;

      (ii) நாடெங்கிலுமுள்ள சமுர்த்தி வங்கிக் கிளைகள் மற்றும் சமுர்த்தி மகா சங்கங்களின் எண்ணிக்கை தனித்தனியாக யாது என்பதையும்;

      (iii) இன்றளவில் அனைத்து சமுர்த்தி சங்கங்கள் வசமுள்ள சொத்துக்களின் அளவு யாது என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) (i) 2018 மே தினக் கொண்டாட்டத்தின் போது பிரதம அமைச்சர் குறிப்பிட்டதன்படி, சமுர்த்தி (வாழ்வின் எழுச்சி) வங்கி இலங்கை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வரப்படுமா என்பதையும்;

      (ii) 2013 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க வாழ்வின் எழுச்சிச் சட்டத்தின்படி, இலங்கை மத்திய வங்கியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள மேற்படி வங்கியை மீண்டும் பொறுப்பேற்பதற்கு வாய்ப்பு உள்ளதா என்பதையும்;

      (iii) அவ்வாறு பொறுப்பேற்கப்படின், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-18

கேட்டவர்

கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks