E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1107/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ விஜித ஹேரத், பா.உ.

    1. 1107/'18

      கௌரவ விஜித ஹேரத்,— அரச தொழில் முயற்சிகள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2018 ஆண்டில் வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன் விமானக் கம்பனியின் விமானப் பொறியியலாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டனவா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேற்படி பதவிக்காக கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iii) மேற்படி பதவிக்காக தேர்ந்தெடுக்கபட்ட நபர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) அதற்காக தோற்றிய 35 விண்ணப்பதாரிகளில் இலங்கை விமானப் படையிலிருந்து வந்து தற்போது ஸ்ரீலங்கன் எயார்லைன் விமானக் கம்பனியில் கடமையாற்றுகின்ற விண்ணப்பதாரர்கள் மூவர் எந்த அடிப்படையில் தெரிவு செய்யப்படவில்லை என்பதையும்;

      (ii) மேற்படி பதவி வழங்கப்பட்டவர்களின் சேவைக்காலம் மற்றும் அனுபவம் எவ்வளவென்பதையும்;

      (iii) ஐந்து வருடங்களுக்கும் குறைவான சேவைக்காலம் உள்ள பயிற்சி பெறாத நபர்களுக்கு அப்பதவி வழங்கப்பட்டமையினால் 20 வருடங்களுக்கும் அதிகமான சேவைக் காலமும் அனுபவமும் உள்ளவர்களுக்கு அநீதி நேர்ந்துள்ளது என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (iv) மேற்படி அநீதி ஏற்பட்டவர்களுக்கு நியாயமான அடிப்படையில் பதவி உயர்வுகள் வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-10-11

கேட்டவர்

கௌரவ விஜித ஹேரத், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks