E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1125/ 2018 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ விமல் வீரவங்ச, பா.உ.

    1. 1125/ '18

      கெளரவ விமல் வீரவன்ச,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) எதிரிசிங்க டிரஸ்ட் இன்வெஸ்ட்மன்ட் (ETI) என்ற பெயரில் அழைக்கப்படுகின்ற நிதிக் கம்பனி இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்டு, அதன் கண்காணிப்பின் கீழ் இயங்கி வந்த நிதிக் கம்பனியா என்பதையும்;

      (ii) வைப்புச் செய்யப்பட்ட பணம் மேற்படி நிதிக் கம்பனியினால் முறையாக திருப்பிச் செலுத்தப்படாமை காரணமாக வைப்பாளர்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளார்கள் என்பதை அவர் அறிவாரா என்பதையும்;

      (iii) இலங்கை மத்திய வங்கியின் கண்காணிப்பு இல்லாத நிதி நிறுவனங்களில் பணத்தை வைப்புச் செய்ய வேண்டாமென்று அரசாங்கம் வழங்கியுள்ள அறிவுரைக்கு அமையச் செயற்பட்டு, இலங்கை மத்திய வங்கியின் கண்காணிப்பின் கீழ் காணப்பட்ட நிறுவனமொன்றில் பணத்தை வைப்புச் செய்த, ETI வைப்பாளர்களின் பணத்தை மீளப் பெற்றுக் கொடுப்பதற்கு தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டம் யாது என்பதையும்;

      (iv) இலங்கை மத்திய வங்கியின் கண்காணிப்பின் கீழ் காணப்படுகின்ற ஏனைய நிதி நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு இவ்வாறான சிக்கல்கள் ஏற்படுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-09-06

கேட்டவர்

கௌரவ விமல் வீரவங்ச, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks