E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0032/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

    1. 32/ '18

      கெளரவ ஹேஷா விதானகே,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இதுவரை 10 வருட சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்துள்ள பொலிஸ் கான்ஸ்டபிள்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (ii) பொலிஸ் சார்ஜன்ட் பதவிக்கு நியமனம் செய்கின்றபோது தற்போது அமுலில் உள்ள முறையியல் யாது என்பதையும்;

      (iii) மேலே (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள்களில் சார்ஜன்ட் பதவிக்கு பதவி உயர்வு பெறுவதற்கு தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள கான்ஸ்டபிள்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (iv) தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள போதிலும், பதவி உயர்வு கிடைக்காத பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு பதவி உயர்வு வழங்க மேற்கொண்டுள்ள நடவடிக்கை யாது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-05-22

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-08-21

பதில் அளித்தார்

கௌரவ ருவன் விஜேவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks