E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0086/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

    1. 86/ '18

      கௌரவ தயாசிறி ஜயசேகர,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் அரச மருத்துவமனைகளில் பணியாற்றும் தாதி உத்தியோகத்தர் களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) தாதி உத்தியோகத்தர் பற்றாக்குறை நிலவும் மருத்துவமனைகள் யாதென்பதையும்;

      (iii) தற்போது நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iv) அவ்வெற்றிடங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;

      (v) மருத்துவமனைகளில் நிலவும் தாதி உத்தியோகத்தர் பற்றாக்குறை காரணமாக நோயாளர்கள் அசௌகரியத்திற்கு உள்ளாவதை இயன்றளவு குறைப்பதற்கு தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) சம்பந்தப்பட்ட வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்களைக் கோருவதற்கு ஏற்கெனவே வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) தாதி உத்தியோகத்தர் பதவிக்கான ஆட்சேர்ப்புத் தகைமைகள் யாவையென்பதையும்;

      (iii) வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஏற்கெனவே நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருப்பின் அவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும் திகதி யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-06-19

கேட்டவர்

கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-06-19

பதில் அளித்தார்

கௌரவ ராஜித சேனாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks