E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0090/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

    1. 90/ '18

      கௌரவ தயாசிறி ஜயசேகர,— கமத்தொழில், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2017 ஆண்டில் யாழ் மாவட்டத்தில் உருளைக்கிழங்கு பயிரிடப்பட்ட காணிகளின் பரப்பளவு எவ்வளவு என்பதையும்;

      (ii) கடந்த போகத்தில் உருளைக்கிழங்கு பயிரிட்ட விவசாயிகளுக்கு உரிய காலத்தில் விதை உருளைக் கிழங்கு பெற்றுக்கொடுக்கப்பட்டதா என்பதையும்;

      (iii) இன்றேல், இதற்கு மாற்றீடாக சின்ன வெங்காயம் செய்கைக்குத் தேவையான விதைகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (iv) உருளைக்கிழங்கு செய்கைக்கான விதைகளை உரிய காலத்தில் பெற்றுக் கொடுக்க முடியாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும் ;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) (i) மாற்றுவழியாக பெற்றுக்கொடுக்கப்பட்ட சின்ன வெங்காயச் செய்கையினால் விவசாயிகளின் வருமான மட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளதா என்பதையும் ;

      (ii) இன்றேல், சின்ன வெங்காயம் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) இன்றேல், இதற்குரிய காரணங்கள் யாவை என்பதையும்;

      (iv) பாதிக்கப்பட்ட செய்கைகளுக்கு அரசாங்கத்தினால் நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்பட்டிருப்பின், அதன் அளவுகள் யாவை என்பதையும் ;

      (v) இவ்வாறு நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்படவில்லையெனில் ஏன் என்பதையும்;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-07-09

கேட்டவர்

கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-07-09

பதில் அளித்தார்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks