E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0214/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

    1. 214/ '18

      கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) பேலியகொட மத்திய மீன் விற்பனைச் சந்தைத் தொகுதி திறக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

      (ii) மேற்படி சந்தைத் தொகுதியின் வாகனத் தரிப்பிடம் திறந்துவைக்கப்பட்ட திகதி முதல் அதன் மூலமாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் வருடாந்தம் பெற்ற வருமானம் எவ்வளவென்பதையும்;

      (iii) மேற்படி வாகன தரிப்பிடத்தின் வருமானத்தின் ஒரு பகுதி தனியார் கம்பனியொன்றுக்கு கிடைக்கின்றதா என்பதையும்;

      (iv) ஆமெனில், மேற்படி பணத்தொகை வருடாந்தம் எவ்வளவென்பதையும்;

      (v) மேற்படி பணத்தொகையை வசூலித்தலானது மேற்படி தனியார் கம்பனிக்கு கேள்விப்பத்திர முறையியலொன்றின்படி வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (vi) ஆமெனில், அதற்கு கேள்விப்பத்திரங்களை சமர்ப்பித்த ஏனைய கம்பனிகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-07

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-03-18

பதில் அளித்தார்

கௌரவ திலிப் வெதஆரச்சி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks