E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0272/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.

    1. 272/ '18

      கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2016 ஆம் ஆண்டு, மொனராகலை மாவட்டத்தில், படல்கும்புர பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கட்டுகஹகல்லே குளத்தை புனரமைப்பதற்காக செலவு செய்யப்பட்ட பணத்தொகை யாதென்பதையும்;

      (ii) அதற்கான சுற்றாடல் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) ஆமெனில், மேற்படி சுற்றாடல் ஆய்வறிக்கையை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      (iv) இந்த கருத்திட்டத்திற்கேதுவான மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மறுசீரமைப்பு பணிகள் யாவையென்பதையும்;

      (v) சம்பந்தப்பட்ட மதிப்பீட்டின் முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      (vi) இப்புனரமைப்பின்போது குளத்தின் ஆழத்தையும் பரப்பளவையும் அதிகரிப்பதற்காக குளத்தின் அடிப்புறத்திலுள்ள மண்படுகை அகற்றும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (vii) மேற்படி மண்படுகை அகற்றப்பட்ட முறை மற்றும் அவை வௌியே குவிக்கப்பட்ட இடம் யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-08-09

கேட்டவர்

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-08-09

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks