E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0319/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி சிசிர ஜயகொடி, பா.உ.

    1. 319/ '18

      கௌரவ சிசிர ஜயகொடி,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2019 ஆம் ஆண்டு உயிரியல் பாடத் துறையில் க.பொ.த. (உயர் தரம்) பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதென்பதையும்;

      (ii) ஒரு வருட காலம் கடந்துள்ளபோதிலும் இதுவரை 5 அலகுகளைக் கொண்ட பாடத்திட்டம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதென்பதையும்;

      (iii) அவைகூட ஆங்கில மொழியில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதென்பதையும்;

      (iv) புதிய பாடத்திட்டத்திற்காக நடைமுறைப் பரிசோதனைகள் மற்றும் ஆசிரியர் கையேடுகள் வழங்கப்படவில்லையென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்போது ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பயிற்சி மற்றும் புதிய பாடத்திட்டம் பற்றிய விழிப்பூட்டல் வழங்கப்பட்டதா என்பதையும்;

      (ii) இன்றேல், அது ஏன் என்பதையும்;

      (iii) முழுப் பாடத்திட்டத்தையும் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் திகதி யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல் என்?

கேட்கப்பட்ட திகதி

2019-05-07

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி சிசிர ஜயகொடி, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-08-06

பதில் அளித்தார்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks