E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0411/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ நிஹால் கலப்பத்தி, பா.உ.

    1. 411/ '19

      கெளரவ நிஹால் கலப்பத்தி,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மதுவரித் திணைக்களத்தின் கீழ் அமைக்கப்பட்ட உற்பத்தி வரிப் பிரிவில் பணியாற்றுவதை மதுவரி பரிசோதகர்கள் நிராகரித்துள்ளனர் என்பதையும்;

      (ii) ஆகவே, அச்சட்டத்தில் மதுவரி பரிசோதகர் சேவைக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதற்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட உப பரிசோதகர்களை மதுவரி பரிசோதகர் சேவைக்கு பதவி உயர்த்தும் பொருட்டு நிதிப் பிரமாணம் 71 இன் கீழ் 10 மதுவரி பரிசோதகர் பதவிகள் வரவு செலவுத் திட்ட பணிப்பாளர் தலைமையதிபதியினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதையும்;

      (iii) அங்கீகரிக்கப்பட்ட மேற்படி பதவிகளை, மதுவரித் திணைக்களத்தின் உற்பத்தி வரி பிரிவில் இணைக்கப்பட்டுள்ள உப பரிசோதகர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலம் பூர்த்திசெய்ய நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அங்கீகரித்துள்ளார் என்பதையும்;

      (iv) சோதனை ஒன்றின் மூலம் பதவி உயர்வு வழங்கி மேற்படி 10 பதவிகளை நிரப்ப அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதையும்;

      அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஆ) (i) உற்பத்தி வரி உப பரிசோதகர்களுக்கு மது வரி பரிசோதகர் பதவிக்கான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) அவ்வாறாயின், அந்த நபர்கள் பெயர்கள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-05

கேட்டவர்

கௌரவ நிஹால் கலப்பத்தி, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-03-19

பதில் அளித்தார்

கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks