E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0416/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ காமினி லொக்குகே, பா.உ.

    1. 416/ '19

      கௌரவ காமினி லொக்குகே,— வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (​i) 2015.01.15 ஆம் திகதியில் மத்திய கலாசார நிதியத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த நிரந்தர, அமைய மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது என்பதையும்;

      (ii) 2015.01.15 தொடக்கம் 2018.05.15 ஆம் திகதி வரை மத்திய கலாசார நிதியத்துக்கு நிரந்தர, அமைய மற்றும் ஒப்பந்த அடிப்படையின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது என்பதையும்;

      (iii) மேற்படி ஆட்சேர்ப்புகள் மத்திய கலாசார நிதியத்தின் ஆளணிக் கட்டுப்பாட்டு திட்டத்துக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iv) மேற்படி (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஊழியர்களுக்காக மத்திய கலாசார நிதியத்தின் மூலம் சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகளாக மாதாந்தம் செலவிடப்படுகின்ற தொகை எவ்வளவென்பதையும்;

      (v) 2015.01.15 தொடக்கம் 2018.05.15 ஆம் திகதி வரை மத்திய கலாசார நிதியத்தினால் தொல்லியல் திணைக்களத்துக்கு நிரந்தர, அமைய மற்றும் ஒப்பந்த அடிப்படையின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

      (vi) மேற்படி (v) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஊழியர்களுக்காக மத்திய கலாசார நிதியத்தின் மூலம் சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகளாக மாதாந்தம் செலவிடப்படுகின்ற தொகை எவ்வளவென்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-02-08

கேட்டவர்

கௌரவ காமினி லொக்குகே, பா.உ.

அமைச்சு

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-08-07

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks