E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0419/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ காமினி லொக்குகே, பா.உ.

    1. 419/ '19

      கெளரவ காமினி லொக்குகே,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சுவீகரிக்கப்பட்டுள்ள மஹரகம பிரதேச செயலாளர் பிரிவின், பன்னிபிட்டிய கிராம அலுவலர் பிரிவில் அமைந்தள்ள ஜின்ஸரஹேனவத்த எனும் காணி மற்றும் கொட்டாவ கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள குலஹேனவத்த எனும் காணியின் அளவைகள் தனித்தனியே யாது என்பதையும்;

      (ii) மேற்படி காணிகளின் ஒரு பர்சஸின் விலைமதிப்புப் பெறுமதி தனித்தனியே யாது என்பதையும்;

      (iii) தற்போது மேற்படி காணிகள், வீடுகளை நிர்மாணிப்பதற்காக தனியார் கம்பனியொன்றுக்கு அல்லது நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (iv) ஆமெனில், மேற்படி காணிகளின் ஒரு பர்சஸின் விற்பனை விலை தனித்தனியே யாது என்பதையும்;

      (v) மேற்படி காணிகளை தனியார் துறைக்கு விற்பனை செய்யும் போது சந்தைப் பெறுமதி பற்றிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

      (vi) மேற்படி காணிகளில் நிர்மாணிக்கப்படுகின்ற வீடுகளை விற்பனை செய்யும் விலைகள் தனித்தனியே யாது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-06

கேட்டவர்

கௌரவ காமினி லொக்குகே, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-03-06

பதில் அளித்தார்

கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks