E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0449/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.

    1.  

      கெளரவ மஹிந்தானந்த அளுத்கமகே,— தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கிராமத்திற்கு விளையாட்டைக் கொண்டு செல்லும் நோக்கத்துடன் விளையாட்டுத்துறை அமைச்சின் நிதியத்தினால் ரூபா மில்லியன் 350 ஐ செலவிட்டு நாவலப்பிட்டி, ஜயதிலக்க விளையாட்டு மைதானம், நீச்சல் தடாகம், உள்ளக விளையாட்டு அரங்கு, பார்வையாளர் கூடம், உள்ளக குத்துச்சண்டை விளையாட்டு அரங்கு என்பவற்றை உள்ளடக்கியதாக பூரணமான விளையாட்டு மைதானமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் அறிவாரா என்பதையும்;

      (ii) 2014 ஆம் ஆண்டின் இறுதிவரை இந்த விளையாட்டு மைதானம் விளையாட்டு அமைச்சின் கண்காணிப்பின் கீழ் நாவலப்பிட்டி நகர சபையினால் நல்லமுறையில் பராமரிப்புச் செய்யப்பட்டு வந்தது என்பதை அவர் ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;

      (iii) கடந்த மூன்று வருட காலப்பகுதிக்குள் இந்த விளையாட்டு மைதானத்தில் பராமரிப்போ, புதுப்பித்தலோ முறையான முகாமைத்துவமோ காணப்படவில்லை என்பதை ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;

      (iv) இவ்வாறான ஏனைய விளையாட்டு மைதானங்கள் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு பொறுப்பேற்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றதைப் போன்று இந்த விளையாட்டு மைதானத்தையும் பொறுப்பேற்றுக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-06-06

கேட்டவர்

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-06-06

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks