E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0526/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ மயந்த திசாநாயக்க, பா.உ.

    1. 526/ '19

      கௌரவ மயந்த திசாநாயக்க,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) மலைநாட்டுப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட மலைநாட்டுக் கிராமிய புனர்வாழ்வளிப்புத் திணைக்களம் கடந்த அரசாங்கத்தினால் ஒழிக்கப்பட்டமை காரணமாக மலைநாட்டுப் பிரதேச மக்களுக்கு அநீதி நேர்ந்துள்ளதென்பதை அவர் ஏற்றுக்கொள்கிறாரா?

      (ஆ) (i) மலைநாட்டு அபிவிருத்தி அதிகாரசபையின் மூலம் மலைநாட்டுப் பிரதேசத்திற்கு உரித்தான அபிவிருத்தி நன்மைகள் யாவை;

      (ii) மேற்படி அதிகாரசபைக்கு ஒதுக்கிய பணத்தொகை எவ்வளவு;

      (iii) ​மேற்படி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அமுலாக்கப்பட்ட கருத்திட்டங்கள் யாவை ;

      (iv) மலைநாட்டு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைமைத்துவம் மற்றும் தாபனப் பொறுப்பினை வகிக்கின்ற ஆட்கள் யார்;

      (v) மலைநாட்டு அபிவிருத்தி அதிகாரசபை மூலமாக மலைநாட்டுப் பிரதேசத்தின் வறிய கிராமங்களின் மக்களுக்கு வழங்கிய தொழில்கள் மற்றும் தொழில்களின் எண்ணிக்கை யாது;

      (vi) மலைநாட்டு அபிவிருத்தி அதிகாரசபையினால் வறிய கிராமங்ளைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கருத்திட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு, மற்றும் கருத்திட்டங்களின் பெயர்கள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) மலைநாட்டுக் கிராமிய புனர்வாழ்வளிப்புத் திணைக்களத்தை மீண்டும் ஆரம்பிக்க கருதியுள்ளாரா;

      (ii) ஆமெனில், அத்திகதி யாது;

      என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-12

கேட்டவர்

கௌரவ மயந்த திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-03-12

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks