E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0624/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ செஹான் சேமசிங்க, பா.உ.

    1. 624/ '18

      கெளரவ செஹான் சேமசிங்க,— கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) வரையறுக்கப்பட்ட லங்கா பொஸ்பேட் கம்பனி தற்போது பெறுகின்ற வருமானம் மற்றும் இலாபம் எவ்வளவு என்பதையும்;

      (ii) 2015 ஆம் ஆண்டு முதல் அதன் தவிசாளராக பணிபுரிந்தவர் யார் என்பதையும்;

      (iii) அவருக்கு உரித்தான உத்தியோகபூர்வ வாகனங்களின் எண்ணிக்கை, எரிபொருள் கொடுப்பனவு மற்றும் சம்பளமும், கொடுப்பனவுகளும் தனித்தனியே யாது என்பதையும்;

      (iv) 2015 ஆம் ஆண்டு முதல் இன்று வரை அவருக்குச் செலுத்தப்பட்டுள்ள மொத்தத் தொகை எவ்வளவு என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக வேறு கொடுப்பனவுகள் செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அத்தொகை எவ்வளவு என்பதையும்;

      (iii) மேற்படி கொடுப்பனவுக்கு அங்கீகாரம் வழங்கியிருப்பது யார் என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-18

கேட்டவர்

கௌரவ செஹான் சேமசிங்க, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-03-18

பதில் அளித்தார்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks