பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
674/ '18
கௌரவ சந்திம கமகே,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அனுராதபுர மாவட்டத்தின் கெக்கிராவை பிரதேச சபை ஆளுகைப் பிரதேசத்தில் இலக்கம் 635 கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள மஹவெவ பாலம் பழுதடைந்துள்ளதென்பதையும்;
(ii) அப்பாலத்தினை மறு சீரமைப்பதற்காக நிதி ஒதுக்கீடுகளைக்கோரி வடமத்திய மாகாண, உள்ளூராட்சி ஆணையாளரினால் மதிப்பீடொன்று தங்கள் அமைச்சிற்கு அனுப்பப்பட்டுள்ளதென்பதையும்;
(iii) அமைச்சின் செயலாளர் இதுவரை நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுத் தரவில்லையென்பதையும்;
(iv) எதிர்வரும் மழை காலத்தில் மஹவெவ பாலம் அழிவடையும் பட்சத்தில் 8 கிராமங்களில் வாழும் சுமார் 7000 விவசாய மக்கள் போக்குவரத்துச் சிரமங்களுக்கு உள்ளாகி நிர்க்கதி நிலைக்கு உள்ளாவார்கள் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி பாலத்தினை மறுசீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
(ii) ஆமெனில் அதற்காக எடுக்கப்படும் காலம் எவ்வளவு என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-06-19
கேட்டவர்
கௌரவ சந்திம கமகே, பா.உ.
அமைச்சு
உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks