E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0772/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

    1. 772/ '19

      கௌரவ இந்திக அனுருத்த ஹேரத்,— நிதி அமைச்சரிடம் கேட்பதற்கு,—

      (அ) (i) நாட்டினுள் செயல் முனைப்புடன் தொழில்முயற்சி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற தனியார் நிதிக் கம்பனிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) அந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான ஒட்டுமொத்த மூலதனத்தின் அளவு எவ்வளவு என்பதையும்;

      (iii) அம் மூலதனத்தை ஏற்பாடு செய்து கொண்ட முறைகள் யாவை என்பதையும்;

      (iv) அந்த நிறுவனங்கள் தமது நிதிச் சேவைகளை மேற்கொள்ளும்போது அவற்றின் பணிகளை மேற்பார்வை செய்வதற்கு அதிகாரம் உடைய நிறுவனங்கள் யாவை என்பதையும்;

      (v) அவ்வாறான மேற்பார்வைகள் சிறந்த மட்டத்தில் இடம்பெறுகின்றது என திருப்தி அடைகின்றாரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) 2016/ 2017 ஆம் ஆண்டுகளில் தனியார் நிதி நிறுவனமாகிய ஈ.டீ.ஐ (ETI) நிதி நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு இழப்பீட்டை செலுத்துவதற்கு பொது திறைசேரி நிதி ஒதுக்கீட்டினை மேற்கொண்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அந்த பணத்தொகை யாதென்பதையும்;

      (iii) தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு நியாயத்தை நிலைநாட்டக்கூடிய வேறு மாற்று வழிகள் யாவை என்பதையும்;

      (iv) தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு பொதுமக்களின் பணத்திலிருந்து இழப்பீடு செலுத்தப்படுதல் தவறான முன்னுதாரணம் என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-07-23

கேட்டவர்

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-07-23

பதில் அளித்தார்

கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks