பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
870/ '19
கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— அமைச்சரவை அந்தஸ்த்தற்ற வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) எல்.பீ கருணாரத்ன என்பவர் உள்ளிட்ட மேலும் 17 பேருக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஓய்வூதியம் செலுத்துகையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதையும்;
(ii) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பொது மனுக்கள் பற்றிய குழு ஆகியவற்றின் சிபாரிசுகளையேனும் அப்போதைய நிதி, வெகுசன ஊடக அமைச்சு நடைமுறைப்படுத்தவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) பொது மக்கள் மனுக்குழுவினால் நடாத்தப்பட்ட விசாரணையில் அப்போதைய நிதி, வெகுசன ஊடக அமைச்சின் உத்தியோகத்தர்கள் ஓய்வூதியம் வழங்குவதற்கு இணங்கியுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;
(ii) சனாதிபதியின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் சனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ள சிபாரிசுகளையும் நடைமுறைப்படுத்தாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்,-
(iii) மேற்படி நபர்களுக்கு ஓய்வூதியம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்,-
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-10-23
கேட்டவர்
கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.
அமைச்சு
அமைச்சரவை அந்தத்தற்ற வெகுசன ஊடக அமைச்சு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks