E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0880/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எஸ்.சீ. முதுகுமாரண, பா.உ.

    1. 880/ '19

      கெளரவ எஸ். சீ. முத்துகுமாரண,— கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் வருடாந்த நுகர்வுக்காக தேவைப்படும் செத்தல் மிளகாயின் அளவு யாது;

      (ii) அந்த அளவு நிறைவு செய்யப்படும் விதம் யாது;

      (iii) உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து மட்டும் தேவையான மிளகாயின் அளவினைப் பெற்றுக்கொள்ள முடியாதென்பதை ஏற்றுக்கொள்வாரா;

      (iv) 2013 தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரை தேசிய அளவில் பயிரிடப்பட்ட மிளகாயின் அளவு ஓவ்வோராண்டு ரீதியாக தனித்தனியாக எவ்வளவு;

      என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) (i) 2013 தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரை சந்தைக்கு அனுப்பப்பட்ட உள்நாட்டு செத்தல் மிளகாயின் அளவு ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் வெவ்வேறாக யாதென்பதையும்;

      (ii) அக்காலப்பகுதியில் வழங்கலில் வீழ்ச்சி அல்லது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) வீழ்ச்சி ஏற்பட்டிருப்பின், வழங்கலை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      (iv) அதிகரிப்பு ஏற்பட்டிருப்பின், அதை மேலும் விருத்தி செய்ய நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-08-08

கேட்டவர்

கௌரவ எஸ்.சீ. முதுகுமாரண, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-08-08

பதில் அளித்தார்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks