E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

1030/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

    1. 1030/ '19

      கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவு இலக்கம் 243 இன் படி, சுற்றுலாக் கைத்தொழில் துறை தொடர்பான பயிற்சிப் பாடநெறிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூபா 100 மில்லியன் எவ்வாறு உபயோகிக்கப்பட்டது என்பதையும்;

      (ii) மேற்கூறிய முன்மொழிவில் குறிப்பிடப்பட்டவாறு காலாண்டு ஒன்றுக்கு 3000 போ் வீதம் வருடமொன்றுக்கு 12,000 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டதா என்பதையும்;

      (iii) இந்த பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்திய நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் யாவை என்பதையும்; அந்த நிறுவனங்கள் அல்லது அமைப்புகளுக்கு வருடத்தினுள் மேற்கொள்ளப்பட்ட மொத்த கொடுப்பனவுத் தொகையைக் குறிப்பிடுவாரா என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-06

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks