E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

1061/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

    1. 1061/ '19

      கௌரவ இஸ்ஹாக் ரஹுமான்,— நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கெக்கிராவை தொடக்கம் கனேவல்பொல நகரம் வரை ஓடுகின்ற சுமார் 7 கி.மீ. நீளமுடைய வீதியானது, கண்டி – அநுராதபுரம் வரை ஒடுகின்ற A - 9 வீதியின் கெக்கிராவ நகரத்திலிருந்து அநுராதபுரம் – மட்டக்களப்பு வரை ஓடுகின்ற A - 11 வீதியில் கனேவல்பொல நகரத்திற்குப் பிரவேசிப்பதற்கான கிட்டிய வழி என்பதையும்;

      (ii) இவ்வீதிப் பகுதியானது 50 வருடங்களுக்கும் அதிகமான காலம் அபிவிருத்தி செய்யப்படவில்லையென்பதையும்;

      (iii) கடந்த அரசாங்கத்தின் கீழ் இவ்வீதிக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோதிலும் தற்போது அப்பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) இவ்வீதியினை அபிவிருத்தி செய்வதன் பொருட்டு துரிதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-11-07

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks